புதன், 30 ஜூன், 2021

லட்சுமி (ஹிந்தி திரைப்படம்) 14 வயது தந்தையாலே பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகிறார்.. உண்மை கதையை ,,,

>

 Sathiya Priya : Lakshmi 2014 Hindi (Based on a True Events)
14 வயதுடைய லக்ஷ்மி தன் தந்தையாலே பாலியல் தொழிலுக்கு விற்க படுகிறாள்
அந்த பெண்ணின்  குழந்தைபருவம் பல நபர்களால் சீரழிக்கபடுகிறது.
 ஒரு கட்டத்தில் அங்கு இருந்து தப்பித்து அவர்களுக்கு எதிராக  ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் வழக்கு தொடுக்கிறாள் வழக்கில் லக்ஷ்மி எதிர் கொள்ளும் சவால்களும் நீதிமன்றம் கேட்கும் கேள்விகளும் மனதை  உருக்கி விடும்
ஒரு கட்டத்தில் வழக்கில் லக்ஷ்மிக்கு நீதி நிலைநாட்ட படுகிறது
ஆனால் அவள் வழக்கை..!
 இறந்த காலத்தை திருப்பி கொடுக்க முடியாது அல்லவா?
வழக்கில் வெற்றி பெற்று ஊடகத்திற்கு அவள் கொடுக்க போகும் பேட்டிக்கு முன் அவள் போடும் உதடு சாயம் பெண்களை போதை பொருளாக மட்டுமே பார்க்கும் அனைத்து ஆண்களின் முகத்தின் மீதும் அவள் உமிழும் எச்சிலாக மட்டுமே என் கண்ணுக்கு தெரிந்தது..!  
2009-ம் ஆண்டு ஆய்வின்படி, இந்தியாவில் 8 லட்சத்து 60 ஆயிரம் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர்.

மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்புகளின் தகவலின்படி, பதிவு செய்துள்ள பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 96 ஆயிரம் பேர். பதிவு செய்யாத பாலியல் தொழிலாளர்கள் 19 சதவீதம் பேர்.
இதில், அதிக எண்ணிக்கையில் பாலியல் தொழிலாளர்களை கொண்ட மாநிலமாக ஆந்திரா திகழ்கிறது. இங்கு, 1 லட்சத்து 56 ஆயிரம் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். டெல்லி 61 ஆயிரம் பாலியல் தொழிலாளர்களுடன் 2வது இடத்தில் உள்ளது.கர்நாடகம் 3வது இடத்திலும், மகாராஷ்டிரா 4வது இடத்திலும் உள்ளன.  
மு.சத்தியபிரியா
அரூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக