வெள்ளி, 7 மே, 2021

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், I BELONG TO DRAVIDIAN STOCK திராவிட அடையாளங்களை பாது காப்போம் .. மீட்டு எடுப்போம்!

May be an image of text that says 'முத்துவேல் & வெற்றி வேல் வீரவேல் வெற்றி வேல் வரவேல் வீரவேல்'
வரலாற்று அடையளங்களாக திகழும் நினைவு நாட்களில் பொதிந்திருக்கும் வரலாறுகளை மறக்கடிக்கும் விதமாக அவற்றின் பெயர்களை மாற்றுவது, அந்த நாட்களிளில் வேறொரு விடயத் தை முன்னிறுத்துவது போன்ற இடைச் செருகல் முயற்சிகளை பார்ப்பனீயம் தான் காலம் காலமாக கையாண்டு வருகிறது.அதே பார்ப்பனீய தந்திரத்தை அதன் நீட்சியா ன பாசிஸ்டுகள் கடந்த சில ஆண்டுகளா க முன்னெடுத்து வருகின்றனர்.இதில் போனால் போகட்டும் என்று விட்டுவிட கூடாது. இந்த முயற்சிகளின் பின்னால் ஆரிய பார்ப்பனீய சதி இருக்கிறது.
மண்ணின் மைந்தர்களே உங்களுக்கு என்று ஒரு வரலாறு கிடையாது.நீங்கள் வெறும் பாமர பழங்குடிகள் மட்டுமே . எந்த கல்வி அறிவும் நாகரீக வளர்ச்சியும் அற்ற வெறும் மனித கூட்டமே என்று
மெதுவாக இந்த மண்ணின் மக்களை யே நம்பவைக்கு முயற்சிதான் இது.
இதில் அவர்கள் பெரு வெற்றி பெற்றுள் ளார்கள்.
இல்லையெனில் திராவிடர்கள் வாழும் நாடுகள் தோறும் காஞ்சி சங்கரனின் சிஷ்யகோடிகள் எப்படி பறந்து பறந்து பணம் சேர்க்க முடியும்?வெறும் பணந்தா னே சேர்க்கிறான் போகட்டும் விட்டு விடு வோமே என்று வாளாதிருந்து விடுமா னால் அவர்களின் பேராசை அத்துடன் நிற்காதே?
எவ்வளவு பெரிய சுதந்திர போரை முன் னெடுத்த இனம் இன்று எப்படி வீழுந்து போயிருக்கிறது?ஒவ்வொரு சகோதர படுகொலைகளின் பின்னாலும் பார்ப்ப னீய நச்சு விதை இருக்கிறது . இந்த உண்மையை ஏற்று கொள்ள நமக்கு தற்போது கொஞ்சம் தயக்கம் இருக்க கூடும்.
ஏனெனில் அவ்வளவு தூரம் பார்பனீயம் நம்மை பாழ்படுத்தி வைத்திருக்கிறது.
பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் ஒரு போதும் தமக்குள் ஒற்றுமையாக இருந்து விட கூடாது என்பதில் அவர்கள் குறியா க இருக்கிறார்கள் .அவர்களின் ஒவ்வொ ரு எழுத்தும் செயலும் மீண்டும் மீண்டும் அதேயேதான் வலியுறுத்துகிறது.
ஒவ்வொரு மனிதனும் நீ வேறு நான் வேறுநீ தாழ்ந்தவன் நான் உயர்ந்தவன் அல்லது நான் தாழ்ந்தவன் நீ உயர்ந்த வன் என்பதாகும். இந்த இரண்டு உணர் வுகளும் சக மனிதர் சக மனிதரோடு ஒரு போதும் சமரசமாகி விட கூடாது என்ற விஷவித்துக்களாகும்..
ஜாதி வேதம் மந்திரம் சம்பிரதாயம் பாரம்பரியம் என்றெல்லாம் நீட்டி முழக்கி னாலும் அர்த்தங்கள் என்னமோ ஒன்று தான்.நீயும் நானும் வேறு வேறு.
அதனால்தான் ஒரே நோக்கத்திற்காக போராட புறப்பட்ட சகோதரரகளை கொன்றொழிக்க அந்த பாசிசத்தால் முடி ந்தது.இது ஒன்றும் புதிய கதை அல்ல.
இந்திய துணைக்கண்டத்தின் வரலாறே இதுதான்.ஒரு பெரிய மக்கள் கூட்டத்தின் மீது எப்படி ஒரு சின்னஞ்சிறு ஆரிய கூட் டத்தால் ஆதிக்கம் செலுத்து முடிகிறது?
இந்திய வரலாறு என்றாலே ஆரியர்க ளின் கட்டு கதைகளையும் ஆங்காங்கே பெயர் மாற்றம் செய்யப்பட்ட கதைகளை யும் தங்கள் வரலாறு என்று திராவிட மக்களையே நம்பவைத்து விட்டார்கள்.
உலகம் முழுவதும் பரந்தது வாழும் திரா விட மக்கள் இன்று ஆரிய பார்பனர்க ளின் ஜாதி மத கலாசாரங்களை தலை மேல் வைத்திருந்து கொண்டாடுவது ஒன்றும் திடீர் என்று ஏற்பட்ட விளைவு அல்ல.ஆண்டாண்டு காலமாக திராவிட வாழ்வியல் மீது ஆரியம் திட்டமிட்டு கட்ட மைத்த பார்ப்பனீயா தந்திரம் அது.
திராவிட அடையாளங்களை மீட்டு எடுப்போம்.ஏனெனில் திராவிட வாழ்வி யல் என்பது சக மனிதரை சக மனிதராக கருதி வாழ்வதாகும்.மக்களை பிரித்து ஒருவர் மீது ஒருவர் சவாரி செய்யும் தந்திரத்தை கற்று கொடுத்தது விட்டு எல்லோருக்கும் மேலே தாங்கள் அமர்ந்து கொண்டு ஆதிக்கம் செலுத்தும் பார்ப் பனியத்தை துரத்துவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக