செவ்வாய், 4 மே, 2021

தமிழக பெண் வாக்காளர்கள் இம்முறை திமுகவுக்கே அதிகம் வாக்களித்தார்கள்! கனிமொழி factor

 Hemavandhana - tamil.oneindia.com:  சென்னை: திமுகவின் எம்பி கனிமொழி முன்னெடுத்த பிரச்சாரங்களே, இன்று அக்கட்சியின் வெற்றிக்கு அடித்தளமிட்டதாக பார்க்கப்பட்டு வருகிறது..!
இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்றுதான் திமுக தலைவர் ஆரம்பம் முதலே முனைப்பு காட்டி வந்தார்.
உங்கள் ஊரில் ஸ்டாலின், கிராம சபை கூட்டம் என பல்வேறு பெயர்களில் தமிழகம் முழுக்க வலம் வந்து மக்களின் குறைகளை கேட்ட ஸ்டாலின், இறுதியாக தேர்தல் பிரச்சாரத்தையும் ஆரம்பித்தார்
ஸ்டாலின் கடந்த மார்ச் 15-ம் தேதி திருவாரூரில் பிரச்சாரத்தை ஆரம்பித்து, 234 தொகுதிகளிலும், புதுச்சேரி மாநிலத்தின் 30 தொகுதிகளிலும், என 21 நாட்களில் 70 கூட்டங்களில் பேசி உள்ளார்..
அதாவது 12 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்தார். காலையில் ஒரு ஊர் என்றால், சாயங்காலம் மு க ஸ்டாலின் வேறு ஒரு ஊரில் இருப்பார்.. அந்த அளவுக்கு சுழன்று சுழன்று பிரச்சாரத்தை முடித்தார்.
மாவட்டம் இப்போது திமுக எம்பி கனிமொழியின் பிரச்சாரம் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது..


30 மாவட்டங்களில், 117 சட்டசபை தொகுதிகளிலும், 100 பேரூராட்சிகளிலும், வாகனத்தில் சென்று பிரசாரம் செய்துள்ளார்..
 மொத்தம், 8,000 கிமீ பயணம் செய்துள்ளாராம். 5 மாதங்களில் 100 நாட்கள் பிரசாரம் செய்து, மொத்தம், 550 கூட்டங்களில் பங்கேற்று பேசினார்

பெண்கள் எப்போதுமே அதிமுகவுக்கு சாதகமாகவே பெண்கள் ஓட்டு விழும் என்பதால், இதை முறியடிக்கவே மகளிர் அணி மாநில செயலாளரான கனிமொழியை முன்கூட்டியே பிரச்சாரத்தில் களமிறக்கப்பட்டாராம்.. இதனால், அவரோ, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, 2020 டிசம்பர் முதல் வாரத்திலேயே, பிரசாரத்தை துவக்கி விட்டார். மீனவர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள், மகளிர் குழு உறுப்பினர்கள், நெசவாளர்கள் என, பல தரப்பட்ட மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார்...

அருந்ததியினர் பல பெண்கள் தாங்களாகவே முன்வந்து, பல பிரச்சனைகள் கனிமொழியிடம் மனம்விட்டு சொல்லியும் உள்ளனர்.. குறிப்பாக, தர்மபுரி மாவட்டம், ஏரியூர் பகுதியில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்து கொண்டே இருந்தது.. அப்போது, கனிமொழியிடம் ஒரு பெண், "நாங்கள் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர்கள், ஆனால் எங்களை எல்லாத்திலும் புறக்கணிக்கிறார்கள் என்று வருத்தத்துடன் சொன்னார்..இதை கேட்டதும் கனிமொழி மேடையில் இருந்து எழுந்து வந்து அந்த பெண்ணை கட்டி அணைத்து கொண்டார்.. இப்படி பெண்களின் ஆதரவு திமுகவுக்கு பெரும் பலத்தை தந்து கொண்டே வந்தது.

பெண்கள் அன்று ஜெயலலிதா இருந்தபோது, பெண்கள் வாக்கு பெரும்பாலும் அவருக்குதான் போகும்.. இன்று பெண்களை கவர, கனிமொழி அந்த இடத்துக்கு வந்துவிட்டார்.. அது அபரிமிதமாகவே ஒர்க் அவுட் ஆகியும் உள்ளது.. இறுதியில், பெண்கள் அதிக அளவில் ஓட்டு போட்டதாலேயே திமுக அதிக இடங்களை கைப்பற்றியும் உள்ளது.. இதனால் கனிமொழிக்கான முக்கியத்துவம் கட்சிக்குள் கூடிக் கொண்டே வருகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக