செவ்வாய், 4 மே, 2021

பிரிட்டனிலிருந்து சென்னைக்கு 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள்! ஒரே நாளில் 2ஆவது முறை!

 Vigneshkumar - tamil.oneindia.com :  சென்னை: பிரிட்டன் நாட்டிலிருந்து இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது.
இந்தியாவில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் டெல்லி, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன.
மேலும், பல பகுதிகளில் ஆக்சிஜனுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் நிகழ்வுகளும்
இந்நிலையில், கொரோனா 2ஆம் அலையால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவ பல்வேறு உலக நாடுகளும் முன் வந்துள்ளன.
அதன்படி பிரிட்டன் நாட்டிலிருந்து இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.


இந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் இந்தியா விமானப்படைக்குச் சொந்தமான விமானத்தில் பிரிட்டன் நாட்டிலிருந்து சென்னை கொண்டு வரப்பட்டன.
முன்னதாக, இன்று காலை 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்னை வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் நாடு முழுவதும் இருக்கும் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு 5000 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் வென்டிலேட்டர்களை அனுப்பவுள்ளதாகப் பிரிட்டன் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக