வெள்ளி, 28 மே, 2021

வங்கதேசத்திடம் கையேந்தும் இந்திய இலங்கை அரசுகள்! தெற்காசியாவின் கதாநாயகனாக உருவாகும் பங்களா தேஷ்

 Velmurugan P - tamil.oneindia.com : டெல்லி: இந்தியாவுக்கு கோவிட் நிவாரணப் பொருட்களை வழங்குவதிலிருந்து, இலங்கைக்கு அதன் நெருக்கடி நேரத்தில் நிதி உதவி வழங்குவது வரை, வங்கதேசம் தனது பொருளாதார பலத்தை வெளிப்படுத்த தொடங்கியது.
மேலும் அண்டை நாடுகளுடன் ஆழமான உறவுகளை ஏற்படுத்துவதற்கு வங்கதேசம் இந்த உதவிகளை பயன்படுத்த தொடங்கியுள்ளது.
இந்த வார தொடக்கத்தில், வங்கதேசம் இலங்கைக்கு 200 மில்லியன் டாலர் நாணய இடமாற்று வசதியை வழங்க ஒப்புக்கொண்டது.
இது அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்த உதவும். இந்த உதவி தற்போது இலங்கை எதிர்கொள்ளும் உலகலாவிய கடன் நெருக்கடியை உதவும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் பிரபல ஆங்கில ஊடகத்திற்கு தெரிவித்தன.
ஏனெனில் இலங்கையின் வெளிநாட்டுக் கடன் நிலைமை மோசமான கட்டத்தில் உள்ளது,


இது அந்நாட்டை பெரிய பண நெருக்கடி சிக்கல்களுக்குள் தள்ளியிருக்கிறது. இலங்கைக்கு இந்த ஆண்டு 3.7 பில்லியன் டாலர் வெளிநாட்டு கடன் முதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது, எனவே வங்கதேசத்திற்கு இந்த ஒத்துழைப்பு அவர்களின் பொருளாதாரத்திற்கு ஒரு உயிர்நாடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வங்கதேச பயணத்தின் போது இந்த ஏற்பாடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடன் உதவி நாணய இடமாற்றம் என்பது ஒரு பரிவர்த்தனை ஆகும், இதில் இரு நாடுகள் ஒருவருக்கொருவர் சமமான பணத்தை பரிமாறிக்கொள்வதுதான் நாணய இடமாற்றம் அகும். இதன் மூலம் வெளிநாடு நாணயங்களை கடன் வாங்குவதற்கான செலவை சாதகமான விலையில் குறைக்க முடியும். 2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பிலிருந்து இலங்கை பொருளாதாரம் ஆழ்ந்த சிக்கலில் உள்ளது, அதன் பின்னர் வெடித்த கொரோனா தொற்று அதன் சுற்றுலாத் துறை மற்றும் பிற துறைகளுக்கு பேரழிவை ஏற்படுத்தி உள்ளது

வங்கதேசம் கொடுத்த உதவி கொரோனா. இரண்டாவது அலைக்கு எதிராக நாம் போராடி வருகிறோம். இந்நிலையில் கோவிட் நிவாரண உதவிகளை இந்தியாவுக்கு இரண்டு முறை அனுப்பிய 40 நாடுகளில் வங்கதேசமும் உள்ளது. மே 18 அன்று, வங்கதேசம் பல்வேறு வைரஸ் தடுப்பு மருந்துகள் மற்றும் கோவிட் பாதுகாப்பு கியர்களின் 2,672 பெட்டிகளை இந்தியாவுக்கு வழங்கியது. அதற்கு முன்னர், டாக்கா மே 6 அன்று ரெம்டெசிவரின் 10,000 குப்பிகளை இந்தியாவுக்கு அனுப்பியிருந்தது . இந்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தை 5.8 சதவீதமாக வங்கதேசம் பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வங்கதேசத்தின் வளர்ச்சியை பார்த்து வியந்து போன அமெரிக்கா, அதனை தனது கண்காணிப்பில் உள்ள நாடாக கொண்டுவர விரும்புகிறது

மிரள வைத்த வங்கதேசம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், அமெரிக்க வர்த்தக சபை வங்கதேசத்தில் உள்ள அமெரிக்க முதலீட்டாளர்களின் முதலீட்டு திறனைப் பார்த்து, இருவழி வர்த்தகத்தையும் மேம்படுத்துகிறது. பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான வங்கதேச அரசு, வளர்ந்து வரும் பொருளாதார வலிமைக்காக, தனது பரம எதிரியான பாகிஸ்தானிடமிருந்து பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

"பாகிஸ்தானில் உள்ள ஒவ்வொரு அரசும, தற்போதைய உள்ள அரசு உள்பட உட்பட, உலகம் முழுவதும் உதவி கேட்டு கையேந்தி கொண்டிருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு, 2020 ஆம் ஆண்டில் வங்கதேசத்தின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி பாகிஸ்தானை விட இரு மடங்காக இருக்கும் என்று நினைத்துப் பார்த்திருக்காது. முந்தைய ஆண்டுகளைப்போல் அதே விகிதத்தில் பொருளாதாரம் வளர்ந்தால் 2030 ஆம் ஆண்டில் வங்கதேசம் பொருளாதார சக்தியாக மாறிவிடும்.. 'பாகிஸ்தானில் இப்படியே, மோசமான பொருளாதார நிலை தொடந்தால் 2030 ஆம் ஆண்டில் நாங்கள் வங்கதேசத்திடம் கையேந்தும் நிலை ஏற்படலாம் "என்று பாகிஸ்தான் திட்டத்திற்கான உலக வங்கியின் முன்னாள் ஆலோசகர் ஆபிட் ஹசன் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக