வெள்ளி, 14 மே, 2021

திமுக இணைய போராளிகளை தக்கவைக்க வழக்கறிஞர் அணி என்ன செய்யவேண்டும்? வரும் காலம் டிஜிட்டல் உலகம் ... நினைவிருக்கட்டும்

 Kandasamy Mariyappan  :   அன்பின் திமுக வழக்கறிஞர்கள் அணி நண்பர்களே...!
முன்பெல்லாம், நடுநிலையாளர்கள் மட்டுமே திமுகவிடம் புனிதத்தை எதிர்பார்ப்பார்கள்.!
தற்பொழுது திமுகவும் புனிதமாக நடந்துகொள்கிறதோ என்று தோன்றுகிறது.!
இவ்வளவு நாட்களாக சமூக வலைதளங்களில் களமாடிய இளைஞர்கள் எல்லாம்...
ஏதோ தன்னை, தனது குடும்ப உறுப்பினர்களை திட்டியதற்காகவோ, தனது அரசியல் சுய லாபத்துக்காகவோ களமாடவில்லை.!
தான் சார்ந்த இயக்கத்தை, அந்த இயக்கத்தின் செயல்பாடுகளை, தனது தலைவனை, தன் தலைவனின் மகனை, தலைவனின் மகளை கேவலமாக பேசுகின்றனரே என்று தன்னெழுச்சியாக தங்களது நேரத்தை செலவழித்து சமூக வலைதளங்களில் களமாடி வந்தனர்.!
ஒன்றை உணர்ந்து கொள்ளுங்கள்,
இனிவரும் காலம், டிஜிட்டல் உலகம் (Digital world). கட்சிகளின் செயல்பாடுகளையும், கொள்கைகளையும் மக்களிடம் எடுத்துச் செல்ல மாவட்ட செயலாளர்களோ ஒன்றிய செயலாளர்களோ கிளை செயலாளர்களோ தேவையில்லை.!
டிஜிட்டல் அணி (IT Wing), பூத் ஏஜென்ட்டுகள் மட்டுமே போதும்.!


மேலும் எதிரணியினர், ஒரு கட்சியின் கடந்தகால செயல்பாடுகள் (Performance) பற்றி பேசமாட்டார்கள்.! தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகளை மட்டுமே அடிப்படையாகக் (Benchmark) கொண்டு விவாதிப்பார்கள்.!
அதேவேளையில் பல பொண்டாட்டி, மஞ்சள் பை, பல லட்சம் கோடி சொத்து, 1.75 லட்சம் கோடி 2G ஊழல், வாரிசு அரசியல் என்று கட்சித் தலைவர்களின் கடந்த கால செயல்பாடுகளை மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டே இருப்பதன் மூலமாக, மக்களின் அடிமனதில் பதித்து விடுவார்கள்.
மேலும், கட்சி மற்றும் ஆட்சியைப் பற்றி நேர்மறையாக சொல்லும் செய்திகளை விட எதிர்மறையாக சொல்லும் செய்திகள் மிக விரைவில் சென்றடையும்.! இது ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு ஆபத்து.!
 

எனவே புனிதம் பார்க்கிறேன் என்று, அவதூறு பரப்புவர்கள் மீது வழக்கு தொடுக்காமல், கட்சியை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வது சிரமம்.!
திமுகவிற்கு மிகப்பெரிய செல்வாக்கோ 50% வாக்கு வங்கியோ இல்லை.!
 

எனவே ஏற்கனவே வழக்குகள் உள்ள குஞ்சுகள், எச். ராஜா, எஸ்.வி.சேகர், மாரிதாஸ், கிஷோர், மதன், கல்யாணராமன், கார்ட்டூன் பாலா போன்றவர்களைக் கூட கைது செய்ய மாட்டோம் என்றால்...
கட்சிக்காக, சித்தாந்தத்திற்காக சமூக வலைதளங்களில் களமாடும் இளைஞர்களுக்கு இந்த சிறிய மகிழ்ச்சியை கூட வழங்க முடியாது என்றால்...
அந்த இளைஞர்கள் உங்கள் பின் வர தயக்கம் காட்டுவார்கள்.
காரணம்,
கட்சிக்காக நேரத்தை செலவழிப்பதால் அவர்களுக்கு எந்த ஒரு தனிப்பட்ட லாபமும் கிடையாது.!
A or B both are remain same.!
எச். ராஜா மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காகத்தான் நெல்லை திரு. கண்ணன் அவர்களை கட்டாயம் கைது செய்து சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று பிடிவாதமாக இருந்து சாதித்துக் காட்டினார்.!
இது ஒரு உளவியல்.!
இந்த சிறிய காரியத்திற்கு கூட கட்சித் தலைமையின் உத்தரவை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் தேவையில்லை என்பது எனது பார்வை.!
பெரியாரிய உணர்வை, கூட்டமைப்பை ஒன்று சேர்த்த எச். ராஜா, எஸ்.வி. சேகர், நாராயணன், ராகவன் போன்றவர்கள் இனிமேல் அந்த காரியங்களை செய்ய மாட்டார்கள்.
காரணம் RSS தலைமை, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படுபவர்களை ஓரங்கட்ட சொல்லி விட்டது.!
எனவே,
திமுகவில் உள்ள இளைஞர்களை நிலை நிறுத்திக் கொள்ளவும், மேலும் பல இளைஞர்களை திமுக பக்கம் ஈர்க்கவும்
IT Wing மற்றும் திமுக வழக்கறிஞர்கள் அணிக்கு மிகப்பெரிய கடமை உள்ளது.
மீண்டும் கூறுகிறேன், இனி வரும் காலம் Digital World.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக