வெள்ளி, 7 மே, 2021

பொள்ளாச்சி குற்றவாளிகள் இனி லஞ்சம் கொடுத்து தப்பிவிட முடியாது

May be an image of 7 people, people standing and text that says 'SIMPL SIMPLIC!TY www.simplicity.in Follow us on Facebook, Instag Instagram, Twitter You Tube @ simplicitycoimbatore SO'
May be an image of 2 people, people standing and text that says 'SIMPLIC!TY www.simplicity.in| Follow us on Facebook, Instagram, Twitter, YouTube @ simplicitycoimbatore'

Shali Mary  : சுடலைமாடனின் ஆட்டம் இனிமேல் தான்.
அஞ்சாதே திரைப்படம் கண்டிருக்கிறீர்களா? அந்தத் திரைப்படத்தின் பாணியில் நடைபெற்ற ஒரு கொடூர சம்பவம்
கடந்த 2010ஆம் ஆண்டு கோவையில் ரஞ்சித்ஜெயின் என்பவரது குழந்தைகளான முஸ்கான் - ரித்திக் இருவரையும் பள்ளிக்கு அழைத்துச்செல்லும் கால்டாக்சி ஓட்டுநர் மோகனசுந்தரமும் அவனது கூட்டாளி மனோகரனும் பாவம் அந்த பிஞ்சுகளைக் கடத்திச்சென்று பொள்ளாச்சி அருகே காட்டுக்குள் PAP கால்வாய்க் கரையோரம் சிறுமியான முஸ்கானைப் பாலியல் வல்லுறவு செய்து கொன்றும்,
அவரது தம்பியையும் கொன்றும் கால்வாயில் வீசினர்,
அப்பொழுது கலைஞர் ஆட்சி, அடுத்த நாளே கொலையாளிகளைப் போலீசார் பிடித்தனர், அதற்கடுத்த இரு தினங்களில் அக்குழந்தைகளை கொன்ற பொள்ளாச்சி PAP கால்வாய் அருகே விசாரணைக்காக அழைத்துச் சென்ற போலீசார் முக்கியக் குற்றவாளியான மோகனசுந்தரத்தை தப்பி ஓட முயற்சித்த காரணத்திற்காக என்வுண்டர் செய்தனர்.


தமிழகமே ஏன் இந்தியாவே ஆரவாரம் செய்தது, அனைத்து பத்திரிக்கைகளும் தமிழக காவல்துறையை புகழ்ந்து தள்ளினர்.
ஏனெனில் முஸ்கான் - ரித்திக் படுகொலை சம்பவம் மக்களிடையே ஏற்படுத்திய அதிர்வுகள் மிக அதிகம்.
கலைஞரின் 2006 முதல் 2011 வரையிலான ஆட்சியில் ரௌடிகள் வேரோடு களையப்பட்டிருந்தனர், போலிச் சாமியார்கள் கைதாகும் செய்திகள் தினசரி ஊடகங்களில் வரும்.
அப்படி மிகுந்த திறனுடன் இருந்த நமது காவல்துறை, ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகராக புகழப்படும் நம் தமிழ்நாட்டின் காவல்துறை கடந்த பத்தாண்டுகளாக செய்தது என்ன? சரி ரௌடிகளை ஒழிக்க வேண்டாம், பாலியல் குற்றச்சம்பவங்களுக்கும், சாதி ஆணவப் படுகொலைகளுக்கும், அவைகளுக்கு காரணமானவர்களை யாரையாவது காவல்துறையினர் உடனடியாக தாமாக கைது செய்தார்களா?
எத்தனை எத்தனை முட்டுக் கட்டைகள் அவர்களுக்கு?
போட்டது யார்?
அருப்புக்கோட்டையில் கல்லூரிப் பெண்களை மிரட்டல் விடுத்து பெரிய அரசியல்வாதிகளுக்கு ஏன் தமிழக முன்னாள் ஆளுநருக்கே அவர்களை பாலியல் இச்சைக்கு பலியாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட நிர்மலா மற்றும் அது தொடர்பான வழக்கின் கதி என்ன தற்போது?
கோடநாடு பங்களாவில் உள் நுழைந்து ஆவணங்களை திருடியதாகவும், லாரியை ஏற்றி கோடநாடு பங்களா காவலாளியை கொலை செய்ததாகவும் ஒருவன் கைதானானே?
முன்னாள் முதல்வர் பழனிச்சாமி பெயர் கூட அதில் அடிபட்டதே அவ்வழக்கு என்னவானது?
பொள்ளாச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்களை பண்ணை வீட்டிற்கு கடத்திச்சென்று, பாலியல் சித்திரவதை செய்து, அதனைப் படமெடுத்து அதை வைத்து அவர்களை மிரட்டி இலட்சக்கணக்கில் பணம் பிடுங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஆளுங்கட்சியினரை அதுவும் வெறும் சில அம்புகளை கைது செய்ய வைக்க மட்டுமே திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எத்தனை போராட்டங்களை பொள்ளாச்சியில் நடத்தின என்று அனைவரும் மறந்திருக்க மாட்டோம்!
இன்னும் அந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை, முறைப்படி அந்த வழக்கை கையில் எடுத்தால் எத்தனை வெள்ளுடை வேந்தர்கள் இன்னும் உள்ளே போவார்கள் என்று போகப் போக தெரியும்!
அம்மையார் ஜெயலலிதா இறப்பில் என்ன மர்மம் உள்ளது என்றும் தெரியவில்லை, அதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் அவர்களை இழிவுபடுத்துவதாக நினைத்து மயிலாப்பூர் தயிராண்டிகள் #சுடலை என்று சமூகவலைதளங்களில் எழுத ஆரம்பித்தனர், அதன் பின் அந்தப் பார்ப்பனர்களை பெரிய ஆட்களாக நினைக்கும் ஆட்டு மந்தைக் கூட்டங்களான சூத்திர சங்கிகளும் சுடலை என்பது  தங்களது உண்மையான சாமியின் பெயர் என்பதை அறிந்தும், அறியாமலும், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் அனைத்து சமுதாய மக்களின் காவல்தெய்வம் என்பது தெரியாமலும், ஸ்டாலின் அவர்களை #சுடலை என்று  ஏதோ அவரை தரம் தாழ்த்துவதாக நினைத்து இன்று வரை அழைத்து வருகின்றனர்..
பார்ப்பனரான ஜெயலலிதாவுக்கே 4.5 வருடங்கள் சிறைதண்டனை பெற வைத்து கோடநாடு உள்ளிட்ட அவர் முறைகேடாக ஊழல் செய்து சேர்த்த அத்தனை சொத்துக்களையும் பறிமுதல் செய்து அரசு கஜானாவில் பத்திரமாக சேர்க்க வைத்தது எங்கள் திமுக இயக்கம், நாலரை ஆண்டுகள் தண்டனை அனுபவித்து சில மாதங்களுக்கு முன் சிறை மீண்ட உங்கள் சின்னம்மாவை கேட்டுப்பாருங்கள் அடிமைகளே!
இனி தமிழ்நாட்டு காவல்துறை திமுக ஆட்சியில் எப்படிச் செயல்படும் என்று காணத்தான் போகிறீர்கள், அதற்கான டீசர் தான் இன்று திருச்செங்கோட்டில் பெண்களை அடித்துச் சித்திரவதை செய்த போலிச்சாமியார் கைது..
ஆம், நாளை எங்கள் சுடலைக்கு கொடைவிழா, அதற்குப் பின் பாருங்கள் சுடலையின் ஆட்டத்தை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக