வெள்ளி, 28 மே, 2021

பெரிய நடிகைகளின் சம்பள பட்டியல்

நடிகைகளின் புதிய சம்பள பட்டியல்.. யார் யார் எத்தனை கோடி வாங்குகிறார்கள் தெரியுமா?
Keerthy Suresh, Tamannaah Bhatia And Anushka Shetty's collection of sarees  is something to die for | IWMBuzz

  மாலைமலர் :நடிகைகளின் புதிய சம்பள பட்டியல்.. யார் யார் எத்தனை கோடி வாங்குகிறார்கள் தெரியுமா?
நடிகைகள் படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்துகிறார்கள் என்றும் படம் வெற்றிபெறும்போது சம்பளத்தை ஏற்றும் நடிகைகள், தோல்வி அடையும்போது குறைப்பது இல்லை என்றும் பட அதிபர்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது.
இந்த நிலையில் தென்னிந்திய முன்னணி கதாநாயகிகளின் புதிய சம்பள பட்டியல் இணையதளத்தில் பரவி வருகிறது. நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.4 கோடி முதல் 5 கோடி வரை கேட்பதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தற்போது நயன்தாரா கைவசம் நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன.
அனுஷ்கா ரூ.3 கோடி வாங்குகிறார். சமந்தா ஒரு படத்துக்கு ரூ.3 கோடியே 50 லட்சம் கேட்பதாக கூறப்படுகிறது. இவர் கைவசம் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் தெலுங்கில் சாகுந்தலம் படங்கள் உள்ளன. பேமிலிமேன் 2 வெப் தொடரிலும் நடித்துள்ளார்.


கீர்த்தி சுரேஷ் ரூ.3 கோடி கேட்பதாக தகவல். இவர் அண்ணாத்த, சாணிகாகிதம் மற்றும் மலையாளம், தெலுங்கில் தலா ஒரு படங்கள் கைவசம் வைத்துள்ளார். காஜல் அகர்வால் ரூ.2 கோடி வாங்குகிறார்.
இந்தியன் 2, பாரீஸ் பாரீஸ், தெலுங்கில் ஆச்சார்யா உள்பட 7 படங்கள் காஜல் அகர்வாலிடம் உள்ளன. திரிஷா ரூ.2 கோடியும், சுருதிஹாசன், தமன்னா ஆகியோர் ரூ.1 கோடியே 50 லட்சமும் கேட்பதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக