புதன், 5 மே, 2021

இயக்குனர் மணிவண்ணன் கயிறு திரித்த கதைகளும் பொய்களையே வரலாறாக்கிய சினிமாக்களும்

 LR Jagadheesan  : இயக்குநர் மணிவண்ணன் முற்று முழுதான அயோக்கியன். அவன் உருவாக்கிய “அமாவாசை” கதாபாத்திரமும் அந்த பெயர் தேர்வும் சோ ராமசாமி விதைத்த திராவிட வெறுப்பைவிடவும் அதிகமான நஞ்சு. ஆலகால விஷம். ஜாதிய ஆணவத்தின் அதிஉச்ச கலைவாந்தி.
உண்மையில் “அமாவாசை” என்கிற பெயரில் இருந்தது அப்பட்டமான தலித் விரோத வெறுப்பின் உச்சம். ஆனால் அது கலைஞரை குறிப்பதாக நினைத்துக்கொண்டு அதைக்கண்டிக்காமல் கள்ள மௌனத்தோடு ரசித்துக் கடந்தவர்களே இங்கே தலித்திய பேரறிஞர்கள்.
எத்தனைவிதமான அவதூறுகளை அவமானங்களை இழிவுகளை கேவலங்களை அந்த மனிதன் மீது இவன்கள் கொட்டினார்கள். அத்தனையையும் அவர் தாங்கினார் என்பதோ முக்கால் நூற்றாண்டுகாலம் தாக்குப்பிடித்தார் என்பதோ சாதனைகள் பல படைத்தார் என்பதோ கூட ஆச்சரியமல்ல.


இந்த குப்பைகள் மீது கூட அவர் ஒருநாளும் தன் வயிற்றில் வெறுப்பை சுமக்கவில்லை என்பதும் “மறப்போம் மன்னிப்போம்” என்பதை வாழ்ந்து காட்டினார் என்பதும் இதுகளையும் மரியாதையாகவே நடத்தினார் என்பதும் தன் மீதான தாக்குதலுக்காக அவர் ஒருநாளும் சோர்ந்துபுலம்பாமல் தன்னம்பிக்கையோடு இயற்கை அனுமதித்த இறுதிநாள்வரை வாழ்ந்து காட்டினார் என்பதும் தான் அவரது தன்னம்பிக்கையின் உன்னதம் என்பேன். அதில் நூற்றில் ஒருபங்கு நமக்கு வாய்த்தாலே வரம்.

Kumarandas Kumarandas  : நயவஞ்சகர்கள்!
சற்று முன் நியூஸ் 18 ல் டாப்10 அரசியல் திரைப்படங்கள் என்ற பட்டியலில் ஆயுத எழுத்து, இருவர்,கோ,முதல்வன், தாய்மாமன்,அமைதிப்படை என்று வரிசைப்படுத்தி மணிவண்ணனின் அமைதிப்படை திரைப்படமே  நம்பர் ஒன் என்று கூறியதோடு இன்றைய சூழலுக்கும் இந்த திரைப்படம் பொருந்துவதாகவும் கூறினர்.
1994 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் இத்திரைப்படம் வெளிவந்தது. ஆனால் அப்போது ஆட்சியில் இல்லாத கலைஞரை மனதில் வைத்து நாகராஜசோழன் எம்.எல்.ஏ, என்ற அம்மாவாசை(சத்யராஜ்) எனும் வில்லன் கதாபாத்திரத்தைப் படைத்து மணிவண்ணன் தனது வஞ்சத்தைத் தீர்த்துக்கொண்டார்.
அம்மாவாசை யை எதிர்த்துப் போராடும் போலீஸ் கார தங்கவேல் (சத்யராஜ்)ஐ வைகோ வாக உருவகித்து காட்சிகளை அமைத்திருந்தார் மணிவண்ணன். ஒவ்வொரு காட்சியிலும் கலைஞர் மீது நஞ்சைக் கக்கியிருந்தார்.
இவ்வளவுக்கும் ஏற்கனவே கலைஞரின் கதை திரைக்கதை வசனத்தில் உருவான  பாலைவன ரோஜாக்கள் 1987, புயல் பாடும் பாட்டு1987 ஆகிய திரைப்படங்களை மணிவண்ணன் இயக்கவும் செய்திருந்தார்.
அப்போது கலைஞரைச் சந்தித்தது பற்றி எல்லாம் மணிவண்ணன் பதிவும் செய்துள்ளார். கலைஞர் இயல்பாகவே கம்யூனிஸ்ட் கட்சிப் பின்புலத்தில் இருந்து வருபவர்களை மிகவும் மதிப்புடன் நடத்துவதைப் பலரும் பதிவு செய்துள்ளனர். அவ்வாறு தான் மணிவண்ணனையும் கலைஞர் அணுகினார்.
ஆனால் மணிவண்ணன் எவ்வித அறமோ , ஆதாரமோ இன்றி திராவிட இயக்க அரசியல் வெறுப்பையும், கலைஞர் வெறுப்பையும், அவதூறையும் தனது அமைதிப் படை களில் (1,2) முன்வைத்தார்.
நாகராஜசோழன்(அம்மாவாசை ) எம்எல்ஏ வால் பாதிக்கப்படும் தலித் இளைஞர் கதாபாத்திரத்திற்கு  கோபால்சாமி என்ற பெயரைச் சூட்டி இருந்தார். சென்சாரில் அப்பெயர் உச்சரிக்கப்படும் இடங்கள் சைலண்ட் ஆக்கப்பட்டன.
இத்திரைப்படம் வெளி வருவதற்கு (ஜனவரி 1994) சற்றுமுன் தான்1993 வைகோ திமுக வில் இருந்து வெளியேறி இருந்தார்.
அமைதிப்படை 1 எடுத்தபோது வைகோ ஆதரவு என்ற பெயரில் கலைஞர் மீது நஞ்சைக் கக்கிய மணிவண்ணன் அமைதிப்படை 2 (2013) எடுத்தபோது சீமானுடன் இணைந்து நின்று கலைஞர் மீது அவதூறு பொழிந்தார்.
மொத்தத்தில் அவரது கலைஞர், திராவிட இயக்க வெறுப்புக்கு ஓர் அரசியல் அடையாளம் தேவைப்பட்டிருக்கிறது. அது முதலில் மார்க்சிய லெனினிய இயக்கம், அடுத்து வைகோ ஆதரவு என்று பயணித்து இறுதியாக நாம்தமிழர் என நிறைவடைந்தது .
கலைஞர் மீது அபாண்டமான சித்திரங்களை எல்லாம் திரையில் எழுதிய இந்த முற்போக்காளருக்கு எம்ஜிஆர் , ஜெயலலிதா பற்றிய உண்மைகளைக் கூட தனது சினிமாக்களில் பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றவில்லை.

1 கருத்து: