புதன், 5 மே, 2021

ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது.. 16 கோடி மோசடி !

tamil.indianexpress.com : தமிழக சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்ற ஹரிநாடார் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளாா.

தமிழகத்தில் நடமாடும் நகைக்கடை என பலராலும் அறியப்படுபவர் ஹரி நாடார். கடந்த சில ஆண்டுகளாக தமிழத்தில் அதிகம் பேசப்படும் நபராக உள்ள இவர், தற்போது சினிமாத்துறையில் அடியெடுத்து வைத்துள்ளார். தயாரிப்பாளராகவும் ஹீரோவாகவும் களமிறங்கியுள்ள இவர், 2கே அழகான காதல் என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.    மேலும் சமீபத்தில் தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆலங்குடி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட இவர், அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு கடும் போட்டியாக விளங்கினார்.

இந்த தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இந்த தேர்தலில் 37627 வாக்குகள் பெற்ற இவர், சுயேச்சையாக அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் என்ற பெருமை பெற்றார்.

இந்நிலையில் 16 கோடி மோசடி செய்ததாக ஹரி நாடார் மீது புகார் எழுந்த  நிலையில், , கேரள மாநிலம் கோவளத்தில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கைது செய்த பெங்களூரு போலீசார் விசாரணைக்காக அவரை பெங்களூருக்கு அழைத்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக