திங்கள், 17 மே, 2021

கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரைப்பட துணை நடிகர் நிதிஷ் வீரா உயிரிழப்பு

  dhinakaran :சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திரைப்பட துணை நடிகர்  நிதிஷ் வீரா உயிரிழந்துள்ளர். புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நிதீஷ் வீரா நடித்துள்ளார். 

தமிழ் திரையுலகம் மற்றும் சின்னத்திரையை சேர்ந்த நடிகர்கள் இறப்பு செய்தி சில தினங்களாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, ஐயப்பன் கோபி ஆகியோர் சமீபத்தில் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் நிதிஷ் வீரா (45) கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
வல்லரசு, புதுப்பேட்டை, சிந்தை செய், காலா, அசுரன், பேரன்பு உள்ளிட்ட ஏராளமான படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நிதிஷ் வீரா நடித்திருக்கிறார்.
அவரின் திடீர் மரணம் ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக