வெள்ளி, 7 மே, 2021

மகேந்திரன் ஒரு துரோகி: கமல் ஆவேசம்

May be a Twitter screenshot of text that says 'Avudaiappan @ImAvudaiappan 3h பொதுவாக திரு .கமல் இது போல விலகியவர்களை பற்றி பேச முன் வரமாட்டார், பெயரை கூட சொல்ல தயங்குவார் ஆனால் இம்முறை விலகிய உடனே பெயரை சொல்லி கடுமையாக தாக்கி அவர் அறிக்கை விடுவது, இயல்பை மீறியதாக தெரிகிறது ஏன் இவ்வளவு கடுமை? 1 127 66 1,027 Sultan @reach_zi 3h After IT raid Mahendran was pushed to backstab kamal and work against him at his own consistency. This kamal got to know but due to election results he was waiting to show him the place, but Mahendran safely posted his resignation before kamal terminates him 2 23'
தினமலர் :சென்னை : நடிகர் கமலில் மக்கள் நீதி மய்யம் கட்சி துணை தலைவர் மகேந்திரன் விலகியதையடுத்து, மூத்த நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்த நிலையில், மகேந்திரன் ஒரு துரோகி என கமல் ஆவேசமாக கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் அறிக்கை:      
களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்துள்ளனர் என்பதை கண்கூடாக கண்டோம்.
களையெடுக்கப்பட வேண்டிய துரோகிகளில் முதல் நபராக இருந்தவர் மகேந்திரன்.     
கட்சிக்காக உழைக்க தயாராக இருந்த பலரை தலையெடுக்க விடாமல் தடுத்ததே இவரது சாதனை.
தன்னை எப்படியும் நீக்கி விடுவர் என்பதை அறிந்தே புத்திசாலித்தனமாக விலகிக் கொண்டார்.     ஒரு களையே தன்னைத் தானே நீக்கிக் கொண்டதில் உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன்.      இனி நம் கட்சிக்கு ஏறுமுகம் தான்.கோழைகளை நாம்பொருட்படுத்த வேண்டியதில்லை.
மண், மொழி காக்க களத்தில் நிற்போம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக