ஞாயிறு, 9 மே, 2021

தமிழ்நாடு அரசு தொடர் அதிரடி! வரலாற்றை மாற்றியமைக்கும் முதல்வர் ஸ்டாலின்!

 Kathir RS  :   பொறுப்பேற்ற 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டையே மாற்றிக்காட்டிய முதல்வர் ஸ்டாலின்.
▪அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ 4000 கொரோனா நிவாரணத்தொகை
▪ பெண்களுக்கு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்.
▪பால் விலை 10% வரை குறைப்பு,
பால் கொள்முதல் விலை 14% வரை அதிகரிப்பு
▪உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்துக்கு புதிய துறை அறிவிப்பு.அதற்கு பொறுப்பு மிக்க அதிகாரி நியமிப்பு
▪தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கோவிட் நோயாளிகளிகளுக்கு அரசு காப்பீட்டின்கீழ் சிகிச்சை.(கட்டணமின்றி)
▪பத்திரிகையாளர்கள் மருத்துவர் செவிலியர்களைப் போலவே முன்களப் பணியளர்கள் என அறிவிப்பு.
▪திருநங்கைகளுக்கும் கட்டணமற்ற  பேருந்து பயணம் என அறிவிப்பு.
▪கொரோனா நோயாளிகளுக்காக 800 படுக்கைகள் - ஆக்சிஜன் வசதிகளுடன் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தயாராகி வரும் கோவிட் பராமரிப்பு மையம் செயலாக்கத்தை துரிதப்படுத்தி முதற்கட்டமாக 300 படுக்கைகள் 10 ஆம் தேதி (நாளைமுதல்) முதல் செயல்படத் தொடங்க ஏற்பாடு.
▪தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்தான கோரிக்கையில் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒத்துழைப்பை தொலைபேசி மூலம் கோருதல்  மற்றும் கடிதம் மூலம் தெரிவித்தல்.
▪சுகாதாரத்துறை மூலம் கொரோனா சூழலை கட்டுப்படுத்தும் வியூகங்கள் அமைத்து முற்கட்டமாக 15 நாட்கள் பொது முடக்க அறிவிப்பு.
அதற்கு முன் இரண்டு நாட்கள் முழு நேர வேலை நாட்களாக்கி அவகாசம் தந்து மக்களை தயார் செய்ததோடு வெளியூர் செல்லும் பேருந்துகள் தங்கு தடையின்றி இயக்கம்.


அடுத்த 24 மணி தேரத்தில் ..
▪தலைமைச் செயலாளர், தற்காலிக அவைத்தலைவர் அறிவிப்பு.
▪சட்டமன்ற கூட்டத்தொடருக்கான ஏற்பாடு.
▪மக்களிடம் காணொலியில் உரை பொது முடக்கத்திற்கு ஒத்துழைப்பு கேட்டு வேண்டுகோள்.
▪நான் முதல்வனில்லை முன்வரிசை பணியாளன் என்று மக்களுக்கு கடிதம்.
▪அதிகாரிகள் கூட்டம்
▪அமைச்சர்கள் கூட்டம் (ஞாயிற்றுக்கிழமையிலும்)
என 48 மணி நேரத்திற்குள் எத்தனை சாதனைகள்.
ஒரு நாள் முதல்வர் என சிலர் படமெடுத்தார்கள்..
இனி ஒவ்வொரு நாளும் நம் முதல்வர் செய்யப்பொகும் நிகழ்த்தப் போகும் மாற்றங்களை சாதனைகளை கொஞ்சம் பேசவாவது செய்வார்களா?
செய்த நல்ல செயல்களையே திரித்து தவறாக பேசிக்கொண்டு திரிகிறார்கள் ஆரியர்களும் சனாதன அடிமைகளும்.
இப்படித்தான் ஒவ்வொரு முறையும் நம் சாதனைகள் இவர்களின் கவர்ச்சியான பேச்சாலும் அவர்கள் கையில் வைத்திருந்த மீடியாவாலும் தூற்றப்பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டன என்பதை மக்கள் இந்நேரம் புரிந்து கொண்டிருப்பார்கள்.
கதிர் ஆர்எஸ்
9/5/21

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக