வியாழன், 6 மே, 2021

மு க அழகிரி : முதலமைச்சர் ஆகவுள்ள ஸ்டாலினை பார்த்து பெருமைப்படுகிறேன், எனது தம்பியான மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்.

'தம்பி ஸ்டாலினுக்கு வாழ்த்து': மு.க.அழகிரி

மின்னம்பலம் : முதல்வராக பதவி ஏற்கவுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.   2021 சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்று திமுக வெற்றி பெற்றது. திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் நாளை காலை 9 மணியளவில் முதல்வராகப் பதவி ஏற்கவுள்ளார். அவருக்கு முன்னாள் முதல்வர் பழனிசாமி உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.       இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, அவரது சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.    “முதலமைச்சர் ஆகவுள்ள ஸ்டாலினை பார்த்து பெருமைப்படுகிறேன், எனது தம்பியான மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். திமுக தலைவர் ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவார்" என்று கூறி வாழ்த்துக் கூறியிருக்கிறார் அழகிரி.     முன்னதாக, மு.க,அழகிரி திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை திமுக ஆட்சி அமைக்கவுள்ள நிலையில் மு.க.அழகிரி, தன்னுடைய தம்பி மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

-பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக