வெள்ளி, 21 மே, 2021

ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகள் மீளப்பெறப்பட்டது ! 93 போராட்டக்காரர்களுக்கு தலா ஒரு லட்சம் நிவாரணம்

 மாலைமலர் : ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடியில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என அப்பகுதியில் உள்ள மக்கள் போராட்டம் நடத்தினர்.
மக்கள் தங்களுடைய கிராமத்திலேயே போராட்டம் நடத்தினர்.
ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு போலீசார் போராட்டத்திற்கு தடைவிதித்து மக்களை கைது செய்தனர்.
கலெக்டர் அலுவலகத்தை நோக்கி மக்கள் செல்லும்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன்பின் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. போலீசார் ஆயிரக்கணக்கானோர் மீது வழக்கு தொடர்ந்தனர். 93 பேரை கைது செய்தனர்.



இந்த நிலையில் ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், போலீசாரால் கைது செய்யப்பட்ட 93 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

ஆனால், பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தியது தொடர்பான வழக்குகள் வாபஸ் பெறப்படாது. உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்குகளும் வாபஸ் பெறப்படாது எனத் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக