ஞாயிறு, 30 மே, 2021

1950,60,70 களில் US,கனடா,UK,ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்தியாவிலிருந்து பார்ப்பனர்களே அதிகமாக குடியேறினார்கள் .

 Dhinakaran Chelliah  : தானம் ..    !    1950,60,70 களில் US,கனடா, UK, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்தியாவிலிருந்து  குடியேறியவர்கள் பிராம்மணர்களே அதிகம்.
‘இதயம் பேசுகிறது’ மணியன் தனது பயணக் குறிப்புகளில் எழுதுவார், அமெரிக்காவில் கண் காணாத ஏதோ ஒரு சிறு கிராமத்திற்கோ, அலாஸ்கா போன்ற பனிப் பிரதேசத்திற்கு போன போதோ அங்கும் ஒரு மாமி வீட்டில் புளிசாதம்,தயிர்சாதம், மாவடுவும் சாப்பிட்டதாகக் குறிப்பிடுவார்.
அவரது பயணக் கட்டுரைகளைப் படிக்கும்  போது பரவாயில்லையே, நம்ம ஊர்க் காரங்க அங்கேயெல்லாம் போயிருக்காங்க என எண்ணி மகழ்ந்திருக்கிறேன்.
அதிலும் குறிப்பா ஒரு சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் ஏன் பெருமளவில் வேறு நாடுகளுக்கு குடியேறி பேனார்கள் என்ற கேள்வி வெகுநாட்களாகவே இருந்தது.
இதற்கான விடை தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்கள் எழுதிய “என் சரித்திரம்” நூலைப் படித்த போது விளங்கியது.
அதில் தஞ்சாவூர் அரசர் ஏகாதேசியன்று தாம்பூலம் தரித்த தோஷத்திற்காக ஒரு கிராமத்தையே பிராம்மணர்களுக்கு தானம் அளித்ததையும் அவர்களுக்கு அக்கிரகார குடியிருப்பு,கிணறு முதலியவைகளை கட்டிக் கொடுத்தாகொவும் எழுதியிருப்பார்.
இப்போது தமிழ்நாட்டு அக்கிரகாரங்கள் காலியாகவே உள்ளன, அங்கு வாழ்ந்த 90 சதவீத பிராம்மணர்கள் நகரங்களுக்கும் வெளி மாநிலங்கள் மற்றும் குறிப்பாக வெளிநாடுகளுக்கும் குடியேறியது அனைவரும் அறிந்ததே.
ஊரில் இருந்தவரை தானமாக வழங்கப்பட்ட விளை நிலங்களை அப்பகுதியில் யாருக்காவது குத்தகைக்கு விட்டு அதில் வரும் தொகையில் சுகபோகமாக வாழ்ந்தவர்கள் இவர்கள்.
1950,60,70 களில்
இந்த விளை நிலங்கள்,வீடு மற்றும் மற்ற சொத்துக்களை நல்ல விலைக்கு விற்று விட்டு வெளிநாடுகளில் குடியேறிவிட்டார்கள்.
ஒருவர் தனது சொந்த உழைப்பின் மூலம் விளைநிலமோ, வீடோ, பிற சொத்துக்களோ வாங்கியிருந்தால் அவற்றை அவ்வளவு எளிதாக விற்று விட்டுப் போக மனம் வராது.அவருக்கு தான் பட்ட கஷ்டமும்,உழைத்த உழைப்பும் அவ்வளவு எளிதில் எதையும் விற்பதற்கு இடம் தராது.
ஆனால், பிராம்மணர்களைப் பொறுத்த வரை  விளைநிலம், மனை,மற்ற அசையும் அசையாத சொத்துக்கள் பெரும்பாலும் தானமாக வழங்கப் பட்டவைகளே. சொந்த  உடல் உழைப்பினால் வந்தவை அல்ல. இதனாலேயே அவர்கள் தானமாக தங்களுக்கு வழங்கப்பட்ட விளைநிலங்களை வீட்டு மனைகளையும் எளிதாக விற்று விட்டு வேறு நாடுகளில் குடியேறுகின்றனர்.அந்த நிலங்களின் மீது இவர்களுக்கு ஒட்டுதலோ பற்றோ இருந்திருக்க வாய்ப்பு இல்லை.

நன்கு படித்த பிராம்மண குடும்பத்தவர்கள் பெரும்பாலும் வைதிக நித்ய கர்மாக்களான    சந்தியாவந்தனம், அக்னி ஹோத்திரம் செய்து பூசைகள் ஏதும் கடைப் பிடிப்பதில்லை.சுருங்கச் சொன்னால் சாஸ்திரம்,ஸம்ஸ்காரம்,கர்ம அநுஷ்டானம் ஏதும் கடைப் பிடிப்பதில்லை. படிப்பிற்கு ஏற்ற உத்யோகத்தில் இருப்பதால் முக்கியமாக புரோகிதத் தொழிலில் இவர்கள் ஈடுபடுவதில்லை. இதை ஒரு நல்ல மாற்றமாகவே கருதுகிறேன்.

நன்கு படிக்காமல் வெளிநாடுகளுக்கு செல்ல இயலாதவர்களே நம் ஊரில் இன்னமும் புரோகிதம் செய்து மக்களை ஏமாற்றி வருகின்றனர்.இ தே கருத்தை எனது நண்பர்களில் சிலர் பகிர்ந்திருக்கிறார்கள்.
விரைவில் இவர்களும் புரோகித த் தொழிலைக் கைவிட்டு வேறு வேலைகளுக்குச் சென்று உழைத்துச் சம்பாதிக்கும் காலம் வர வேண்டும்.
இதே கருத்து கோயிலை நம்பி மற்றவர்களின் கடவுள் நம்பிக்கை ஒன்றை மூலதனமாகக் கொண்டு சுரண்டலில் ஈடுபடும் எல்லா சமுதாயத்திற்கும் பொருந்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக