செவ்வாய், 27 ஏப்ரல், 2021

François Gros பிரான்ஸ் நாட்டுத்தமிழறிஞர் பிரான்சுவா குரோ மறைந்து விட்டார்.

Gros says interest in classical languages is dipping across the world as English takes precedence. Photo: Sharp Image (Sharp Image)

இலங்கநாதன் குகநாதன் :பிரான்ஸ் நாட்டுத்தமிழறிஞர் பிரான்சுவா குரோ { François Gros  }  மறைந்து விட்டார்.
பிரான்சில் 1933ம் ஆண்டில் பிறந்த இவர் 1963ம் ஆண்டு
புதுச்சேரி பிரான்சு ஆய்வு நிறுவனத்தில் இணைந்தது முதல் தமிழில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
சங்க இலக்கியங்கள் முதல் பக்தி இலக்கியங்கள் வரைக் கற்றுத் தேர்ந்த அவரின் #தமிழ்த்தொண்டுகளில் சில வருமாறு.
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலினைக் கற்றமையுடன், அதை இசையுடன் குடந்தை ப. சுந்தரேசனார் என்பவரிடமிருந்து கேட்டறிந்தார் {நாம் இன்னமும் சங்க இலக்கியங்கள் படித்தறிவதற்கு மட்டுமே என்று இன்றும்  நம்பிக் கொண்டு இருக்கிறோம்.
பரிபாடலின் இசையுண்மைகளைக் கண்டறிந்த பின்னரே பிரான்சு மொழியில் பரிபாடலினை மொழி பெயர்த்திருந்தார்.
திருக்குறளின் காமத்துப் பாலை பிரான்சு மொழியில் மொழி பெயர்த்து 1993 இல் வெளியிட்டிருந்தார் { நாம் இன்னமும் திருக்குறளின் மூன்றாவது பாலினைக் `#இன்பத்துப்பால்` என அழைக்க, அவர் சரியாகக் `#காமத்துப்பால்` எனவே குறிப்பிட்டிருப்பார் }
காரைக்கால் அம்மையார் வரலாறு, சேக்கிழார் பாடிய காரைக்கால் அம்மையார் புராணம் உட்படப் பல பக்திஇலக்கியங்களையும் பிரான்சு மொழியில் மொழி பெயர்த்திருந்தார்.Francois-Gros classical Tamil


 #குடவோலைமுறை_உத்திரமேரூர் வரலாறு என்பன தொடர்பாகவும் பிரான்சு மொழியில் எழுதியுள்ளார்.
தலித்தியம், சிறுகதைகள் தொடர்பிலும் செயற்பட்ட ஐயா குரோ அவர்கள் கண்ணனுடன் இணைந்து `நாகலிங்க மரம்` என்ற பெயரில் #தமிழ்ச்சிறுகதைகளை மொழி பெயர்த்து எழுதியிருந்தார். பல தமிழ் #எழுத்தாளர்களின் சிறுகதைகளை உள்ளடக்கியே பிரான்சு மொழியில் இத் தொகுப்பு வெளிவந்திருந்தது.
உலகத்தமிழாராய்ச்சி மாநாடுகளிலும் #தனிநாயகம் அடிகளாருடன் சேர்ந்து, ஐயா குரோவும் பங்காற்றியிருந்தார்.
 #சங்கஇலக்கியங்கள் முதல் இன்றைய கால இலக்கியங்கள் வரையான #தமிழ்இலக்கியங்களைப் பிரான்சுநாட்டுக்கு_அவர்களின்_மொழியிலே_அறிமுகப்படுத்திய_ஐயா #குரோவுக்கு_நினைவு_வணக்கம். :- இலங்கநாதன் குகநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக