செவ்வாய், 27 ஏப்ரல், 2021

இந்தோனீசியாவில் காணாமல்போன நீர்மூழ்கிக் கப்பல்; 53 பேரும் உயிரிழந்தனர்

.tamilmurasu.com :இந்தோனீசியாவில் காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பல் நேற்று மூன்று பாகங்களாக கண்டுபிடிக்கப் பட்டன. அதிலிருந்த 53 பேரும் இறந்துவிட்டனர். இதையடுத்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.> கடந்த புதன்கிழமை காணாமல் போன நீர் மூழ்கிக் கப்பலில் இருந்த வர்களின் உயிர்க்காப்பு கவசங்கள் நேற்று மீட்கப்பட்டன.“தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் ‘கேஆர்ஐ நங்கலா’ நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கி அதிலிருந்த அனை வரும் இறந்துவிட்டனர்,” என்று இந்தோனீசிய ராணுவத் தளபதி மார்ஷல் ஹாடி ஜஜான்டோ செய்தி யாளர்களிடம் தெரிவித்தார். பாலித் தீவுக்கு அருகே 53 பேரு­டன் நீர்­மூழ்­கிக் கப்­பல் காணா­மல்­போ­ன­தாக கடந்த புதன் கிழமை இந்­தோ­னீ­சியா அர­சாங்­கம் அறி­வித்­தது.

இதை­ய­டுத்து சிங்­கப்­பூர் உட்­பட உலக நாடு­க­ளிடம் இந்­தோ­னீ­சியா உதவி ேகட்டது.

உடனே, ‘எம்வி சுவி­ஃப்ட் ரிஸ்­கியூ’ எனும் நீர்­மூழ்கி மீட்­புக் கப்­பலை சிங்­கப்­பூர் அனுப்பி வைத்­தது.

இந்­தக் கப்­பல் நேற்று விடி­யற்­காலை பாலித் தீவை வந்­த­டைந்­தது.

இதற்­கி­டையே நேற்று காலை தொலைக்­காட்­சி­யில் உரை­யாற்­றிய இந்­தோ­னீ­சிய அதி­பர் ஜோக்கோ விடோடோ, “இந்­தத் துய­ரச் சம்­ப­வம் எங்­கள் அனை­வ­ரை­யும் அதிர்ச்­சி­ய­டைய வைத்­துள்­ளது,” என்­றார்.

“நீழ்­மூழ்­கிக் கப்­ப­லில் இருந்­த­வர்­க­ளின் குடும்­பங்­க­ளுக்கு எங்­க­ளு­டைய ஆழ்ந்த அனு­தா­பத்­தைத் தெரி­வித்­துக் கொள்­கி­றோம். கப்­ப­லில் இருந்த அனை­வ­ரும் இந்­நாட்­டின் மகன்­கள். நாட்­டின் இறை­யாண்­மை­யைக் காத்த சிறந்த தேசப்­பற்­றா­ளர்­கள்,” என்­றும் அவர் கூறி­னார்.

“நாம் அனை­வ­ரும் அவர்­க­ளுக்­கா­க­வும் அவர்­க­ளது குடும்­பத்­திற்­கா­க­வும் பிரார்த்­தனை செய்­வோம். அவர்­க­ளின் குடும்ப உறுப்­பி­னர்­கள் அனை­வ­ருக்­கும் பொறுமை, துணிச்­சல் மற்­றும் வலி­மையை வழங்க பிரார்த்­திப்­போம்,” என்று அதி­பர் ஜோக்கோ விடோடோ சொன்­னார்.

‘கேஆர்ஐ நங்­காலா’ நீர்­மூழ்­கிக் கப்­பலை 850 மீட்­டர் ஆழத்­தி­லி­ருந்து மீட்­ப­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்து வரு­கி­றோம்,” என்று சனிக்­கி­ழமை பேசிய இந்­தோ­னீ­சிய கடற்­ப­டைத் தள­பதி அட்­மி­ரல் யூடோ மர்­கோனோ கூறி­யி­ருந்­தார்.

நீர்­மூழ்­கிக் கப்­பல் தாங்­கக்­கூ­டிய 500 மீட்­டர் ஆழத்­திற்கு மேல் மூழ்­கி­யி­ருப்­ப­தால் அது நீர் அழுத்­தத்­தால் நசுக்­கப்­பட்டு விரி­சல் அைடந்­தி­ருக்­க­லாம். இது­போன்ற ஆழத்­தி­லி­ருந்து கப்­பலை மீட்­பது சிர­மம் என்று அவர் தெரி­வித்­தார்.

பாலித் தீவூக்கு அருகே நீரில் மூழ்கி, தாக்கி அழிக்­கும் பயிற்­சி­யில் ஈடு­பட்­ட­போது நீர்­மூழ்­கிக் கப்­பல் மாய­மா­னது.

ஜெர்­ம­னில் கட்­டப்­பட்ட 44 ஆண்டு பழ­மை­யான நீழ்­மூழ்­கிக் கப்­பலில் 72 மணி நேரத்­திற்கு மட்­டுமே தேவை­யான பிரா­ண­வாயு இருந்­தது.

சனிக்­கி­ழமை காலை­யில் அது தீர்ந்­தி­ருக்கலாம் என நம்பப்படு கிறது

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக