திங்கள், 26 ஏப்ரல், 2021

தமிழகத்திலும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் ... ? ஸ்டெர்லைட் ஆக்சிஜன் அனுமதியின் பின்னணியில் உள்ள ரகசியம் இதுதான்

Subbhhu S :Liquid oxygen manufacture உற்பத்தி செய்ய கூடிய ஒரு யூனிட்  unit set பண்ண எவ்வளவு காலம் எடுக்கும்?
அசாம் மாநிலத்தில் அரசு சார்பா ஒரு liquid oxygen & nitrogen manufacturing unit set பண்ற proposal plan இது பற்றிய ஒரு தெளிவான செய்தியை தருகிறது...
estimated cost 44 கோடி. மினிமம் 2 acres of land and time period for completion 18 months (11/2 years) னு கொடுக்கபட்டிருந்தது.
ஆக, புதுசா ஒரு plant start பண்ணனும்னா crisis situation ல போர்கால அடிப்படைல செயல்பட்டா கூட ஆறு மாதங்களுக்கு குறைவா முடிக்க வாய்ப்பில்ல..
மே மாதத்துல கொரோனா பரவல் உச்சத்தை தொடும்னு medical experts தெரிவிக்கும் போது , நாடு முழுவதும் உள்ள ஆக்ஸிஜன் பற்றாக்குறைய கணக்கில் எடுத்து பார்க்கும் பொழுது,
தமிழகத்திலும் அதுபோன்ற ஒரு நிலை ஏற்படாது என்று உறுதியாக சொல்லமுடியாத போது,
பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாமல் ,
இந்த பத்து ஆண்டுகளில் ஆளும் அடிமை அதிமுக அரசு மருத்துவ சுகாதார துறையே சிதைத்து வைத்திருக்கும் போது ,
புதிதாக அமையவிருக்கும் திமுக அரசு தமிழக மக்களுடைய உயிரை காக்கும் விஷயத்தில் ரிஸ்க் எடுக்க முடியாது.
ஆக, உடனடி ஆக்ஸிஜன் தேவையை சமாளிக்கும் பொருட்டு அத்தகைய ஆக்ஸிஜன் தயாரிப்பை உடனடியாக செயல்படுத்தகூடிய உபகரணங்களையும் கட்டமைப்பையும் பெற்றிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை திமுக அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவித்த வழிமுறைகளுடனும் கட்டுபாடுகளுடனும் பயன்படுத்தி கொள்ள எடுத்த முடிவு சரியானதே.

நோக்கமில்லாதவர்களுக்கு மக்களின் உயிரை பற்றி எந்த அக்கறையும் பொறுப்பும் கிடையாது.
கொரோனா நிலமையை மிக மோசமாக கையாண்ட ஆட்சியில் இருந்து அகலப்போகும் அடிமை எடப்பாடி அரசுக்கும் எந்த சிக்கலும் இருக்க போவது கிடையாது.
நாளை, கொரோனா உச்சமடையும் வேளையில், ஆக்ஸிஜன் பற்றாகுறையால் மக்கள் உயிர்கள் கண்முன்னே பறிமோனால், இதே நாக்குகள் வேறு விதமாக பிறழும். ஏனெனில், இவர்களின் நோக்கம் திமுக மீது பழியை போடுவதும் அழித்தொழிப்பதும் ஒன்றே !!!....
 
செல்லபுரம் வள்ளியம்மை : எந்த ஒரு கட்சியும் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் அல்லது ஆறுமாதம் ஆக குறைந்தது மூன்று மாதங்களாவது அந்த கட்சியை எதிர்ப்பவர்கள் சற்று அமைதி காப்பார்கள் . அது ஒரு ஜனநாயக பண்பு.
புதிய ஆட்சியில் அமர்ந்துள்ள கட்சிக்கு ஆட்சியிலும் கட்சியிலும் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் இருக்கும்.
மேலும் புதிதாக ஆட்சிக்கு வந்த கட்சிக்கு அதன் நீண்ட காலத்திட்டங்கள் உடனடி திட்டங்கள் என்று இருவேறு விதமான அணுகுமுறையோடு செயல்படவேண்டிய அவசியம் இருக்கிறது.
உதாரணமாக எந்த உணவு பொருளையும் நாம் இறக்குமதி செய்ய மாட்டோம் என்பது கட்சியின் நீண்ட காலத்திட்டம்.
ஆனால் உடனடி பட்டினி சாவை தடுக்கவேண்டும் என்றால் உணவை அவசரமாக இறக்குமதி செய்யவேண்டிய தேவை இருக்கும்
உடனே ஆகா உள்ளூர் உற்பத்தியை பெருக்குகிறோம் என்று பதவிக்கு வந்தார்கள் ஆனால் இப்போது உணவை இறக்குமதி செய்கிறார்களே என்பது எவ்வளவு பெரிய அபத்தம்?
இப்போது விடயத்திற்கு வருவோம்:
சர்வகட்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட ஒரு முடிவை பற்றி அதுவும் ஆக்சிஜன் விடயம்,
அதிலும் அவசரப்பட்டு திமுகவை பற்றி மட்டும் குறிவைத்து தாக்குவது?
இந்த விடயம் பற்றி  நாம் தமிழர் தம்பிகளின் வாட்சப் தகவல்கள்தான் முதலில் அறிவித்தன.
அவற்றில் கூட தெளிவான விளக்கம் இல்லை   திமுகவை பற்றிய அவதூறுகளே  நிரம்பி இருந்தன
   
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக