திங்கள், 26 ஏப்ரல், 2021

கோலார் வயல் திருமதி செல்வி தாஸ் காலமானார் .. முன்னாள் எம்பி, துணைவேந்தர்..

Mysore/Mysuru: Prof. P. Selvie Das, former Vice-Chancellor, University of Mysore (UoM), a renowned educationist and a former Parliamentarian, passed away at her residence in Bengaluru in the wee hours of today following prolonged illness. She was 89. She was a spinster. Last rites were held at Bengaluru this afternoon, according to sources. Born in 1932…
May be an image of 7 people, child and people standing

May be an image of 1 person and text

May be an image of Thamilaali Inaiyam and standingSusairaj Babu  : வருந்தத்தக்க இரவு நண்பர்களே....
 கோலார் தங்கவயல் பெண்கள் 1920களிலேயே கல்லூரிப் படிப்பை முடித்தார்கள்,  பைக் ஓட்டினார்கள், கலப்புத் திருமணத்திற்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்,
இந்தியாவில் இருக்கின்ற அனைத்து சாதியினரும் திருமணம் செய்து கொண்டவர்கள் தங்கவயல் பெண்கள். இது வரலாறு. வடார்க்காடு மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டு தங்கவயலில் தங்கச் சுரங்க பகுதியில்  குடியேறிய ஒரு குடும்பத்தின்  பெண் தான் கல்வியாளர் செல்வி தாஸ்!
இவருடைய தந்தை திரு,  தாஸ் காண்ட்ராக்டர்,
அரசில் தங்கச் சுரங்கத்தில் சுரங்க கட்டமைப்பிற்கு மரங்களை வழங்கிய ஒரு பெரிய காண்ட்ராக்டர், இவருடைய மகள் தான் செல்வி தாஸ்  
இன்றுவரை இந்தியாவிலேயே அதிகம் படித்தவர் என்ற பெருமை கொண்டவர்,
மைசூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஐந்து ஆண்டு காலம் பணியாற்றியவர்,


(1980 களில்) இன்றைய ஏபிவிபி, பாரதிய ஜனதா கட்சி, போல் செயல்பட்ட அன்றைய ஜன சங் கட்சியானது, இவர் அமர்ந்த நாற்காலியை கங்கை நீர்கொண்டு தூய்மைப்படுத்துவதாக  சொல்லி பூஜை செய்தது,
காரணம் இவர் பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர். அன்று சமூக நீதியில் அக்கறை கொண்ட  கர்நாடக மாநில திராவிட முன்னேற்றக் கழகம், பௌத்த சங்கம், ஆதிதிராவிடமகாசபை போன்றவை போராட்டம் நடத்தியது இந்த நிகழ்ச்சிக்கு எதிராக..
 கோலார் தங்க வயலில் பிறந்தவர். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் மைசூர் சமஸ்தானம் பிறகு வந்த கர்நாடக அரசும் அவரை விடவில்லை,
பல்கலைக்கழகத்திற்கு பாடத்திட்டங்களை வகுக்க கூடிய ஒரு தலைவராக இவரை நியமித்தது.
காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசானது இவரின்  கல்வி பணியைப் பாராட்டி ஆறாண்டு காலம் ராஜ்யசபா உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு அனுப்பியது.
பெங்களூர் சதாசிவம் நகரில் தற்போது வாழ்ந்து வந்த இவர், இன்று தன் இறுதி மூச்சை நிறுத்தினார்.கல்விக்காவே திருமணம் செய்துகொள்ளாத ,  
ஒரு போராளி. தன் இறுதி மூச்சை இன்று நிறுத்திக்கொண்டார் அரசியல் கட்சிகளின் மீது ஆர்வம் இல்லாதவர்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக