செவ்வாய், 13 ஏப்ரல், 2021

அரக்கோணம் இரட்டை கொலையாளிகள் அதிமுகவை சேர்ந்த வன்னியர்கள்! பாமகவினர் அல்ல! அரங்க குணசேகரன்

அரங்க குணசேகரன் :வன்னியர்கள்  என்றாலே பாமக என்பதுமான அரசியல் ஆரோக்கியமான அரசியல் இல்லை.
" கொலையாளிகள் பாமகவினர் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டோம்! 
.அன்பார்ந்த சனநாயக ஆற்றல்களே தோழமைகளே!
அரக்கோணம் இரட்டைக்கொலையை வன்மையாக கண்டிக்கிறேன்!
கொல்லப்பட்ட பறையர்கள் இருவருக்கும் எமது ஆழ்ந்த  இரங்கலையும்
புகழ் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்!
கொலையாளிகளான வன்னியர்களில் தொடர்புடையவர்கள் இருபதுபேரையும் தமிழ்நாடு காவல்துறை எந்தவிதமான அரசியல் அழுத்தத்துக்கும் பணியாமல் கைது செய்ய வேண்டும்!
கொலையில் முழுப்பாத்திரம் வகித்தவர்கள் அதிமுக வைச்  சேர்ந்த வன்னியர்களே!.
வன்னியர்கள்  என்றாலே பாமக என்பதும் பறையர்கள் என்றாலே விசிக என்பதுமான அரசியல் ஆரோக்கியமான அரசியல் இல்லை.


எனது முந்தைய பதிவில்கூட பாமக வன்னியர்களின் கொலை வெறியாட்டத்தை கண்டிக்கிறேன் என்ற பதிவை இப்போது திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்!
தமிழக அரசு கொல்லப்பட்ட அர்ஜூன் சூர்யா குடும்பத்தினருக்கு தலா ஐம்பது இலட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும்
.கைம்பெண்களாகிவிட்ட அர்ஜுன் சூர்யா மனைவியர் இருவருக்கும் காலமுறை ஊதியத்தில் முன்னுரிமை அடிப்படையில் அரசுத்துறையில் வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும்!
பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவுடனான தோழமையை கருத்தில் கொள்ளாமல் இத்தகைய கொலைகளைக் கண்டிக்க முன்வரவேண்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக