வெள்ளி, 16 ஏப்ரல், 2021

உணவு பொருட்களை வாங்கிக் குவிக்கும் மக்கள்.. பல பொருட்கள் அவுட் ஆப் ஸ்டாக்..!

 உணவு பொருட்கள் தட்டுப்பாடு

Prasanna வெங்கடேஷ் tamil.goodreturns.i : இந்தியா முழுவதும் கொரோனா தொற்றுக் காரணமாக லாக்டவுன் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருவது மட்டும் அல்லாமல் நாளுக்கு நாள் இது கடுமையாகி வருகிறது.
இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை 2020 மார்ச் மாதத்திற்குப் பின்பு மீண்டும் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் மக்கள் உணவுப் பொருட்களை மிகப்பெரிய அளவில் வாங்கத் துவங்கியுள்ளனர்.
இதனால் ஷாப்பிங் மால், மளிகை கடைகள், ஈகாமர்ஸ் தளத்தில் பொருட்களுக்குத் திடீர் தட்டுப்பாடு உருவாகியுள்ளது.
கொரோனா 2வது அலை கொரோனா 2வது அலை கொரோனாவின் 2வது அலையில் தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் மிகவும் அதிகமாக இருக்கும் காரணத்தால் இந்தியா மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது.


 இந்த சூழ்நிலையில் மாநில அரசுகள் அடுத்தடுத்து லாக்டவுன் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை அதிகளவில் ஒரே நேரத்தில் வாங்கும் காரணத்தால் பெரு நகரங்களில் மளிகை கடைகள் முதல் ஈகாமர்ஸ் தளங்கள் வரையில் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

பொதுவாக மும்பை, சென்னை, பெங்களூர் ஆகிய பெரு நகரங்களில் உணவு மற்றும் மளிகை பொருட்களை ஆர்டர் செய்தால் ஒரு நாள் அதிகப்படியாக 2 நாட்களில் டெலிவரி செய்யப்படும். ஆனால் தற்போது 3 முதல் 4 நாட்கள் வரையில் டெலிவரி காலம் தேவைப்படுகிறது.

 மேலும் மகாராஷ்டிராவில் தற்போது 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது மட்டும் அல்லாமல் அத்தியாவசிய தேவையான பொருட்களுக்கு மட்டுமே டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் தற்போது மக்கள் பிஸ்கேட், சாக்லேட், பேக் செய்யப்பட்ட உணவு பொருட்களை அதிகளவில் வாங்கிக் குவித்து வருகின்றனர்.
 பல நகரங்களில் ஈகாமர்ஸ் தளத்தில் இதற்கு out of stock போடப்பட்டு உள்ளது. 2020 மார்ச் லாக்டவுன் விதிக்கப்பட்ட போதும் இதேபோன்ற நிலை தான் உருவானது.

ஒருபக்கம் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவி வரும் வேளையில், மறுமுனையில் டெலிவரி செய்வதில் அதிகப்படியான நெருக்கடி நிலவும் காரணத்தால் அதிகளவிலான வர்த்தகப் பாதிப்புகளை ஈகாமர்ஸ் மற்றும் ஆன்லைன் நிறுவனங்கள் எதிர்கொண்டு வருகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக