வெள்ளி, 16 ஏப்ரல், 2021

கும்ப மேளாவுக்காக குவியும் பக்தர்கள் கொரோனாவால் திணறும் ஹரித்வார்

tamil.samayam.com : கும்ப மேளாவுக்காக ஹரித்வாரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வரும் நிலையில் இரண்டே நாட்களில் சுமார் 1000 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் இன்று ஒரே நாளில் 594 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
ஒட்டுமொத்தமாக ஹரித்வாரில் 2,812 பேர் கொரோனாவால் (Active cases) பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 408 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
நாளை இரவு முதல் பொது முடக்கம்: அரசு அதிரடி உத்தரவு!
கும்ப மேளா பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஏராளமான யாத்ரீகர்கள் ஹரித்வாருக்கு வந்து கங்கையில் புனித நீராடி செல்கின்றனர். கூட்டம் மிகுதியின் விளைவாக ஹரித்வாரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் உத்தராகண்ட் மாநிலத்தில் 1,925 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுளது. மேலும், 13 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், ஹரித்வாரில் கும்ப மேளாவுக்காக குவியும் யாத்ரீகர்களின் எண்ணிக்கை குறையவில்லை.
இன்று கும்ப மேளாவின் 13ஆவது தினம். இதுவரை ஏறக்குறைய 10 லட்சம் பேர் கங்கையில் நீராடச் சென்றுள்ளதாக தெரிகிறது. நேற்று ஒரே நாளில் சுமார் ஒரு லட்சம் பேர் புனித நீராடியுள்ளனர். ஏராளமானோர் மாஸ்க் அணியாமலும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காமலும் இருந்துள்ளனர்.

திஹார் ஜெயிலுக்குள் புகுந்த கொரோனா.. அதிகாரிகள் ஷாக்!
பக்தர்கள் மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான துறவிகளும் கும்ப மேளாவில் குவிந்தனர். பக்தர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுமென
ஹரித்வார் முழுக்க போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும், கூட்டம் மிகுதியான பகுதிகளில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக