திங்கள், 19 ஏப்ரல், 2021

வேலூர் அடுக்கம்பாறையில் ஆக்சிஜன் குழாய் வெடித்தது . ஐந்து நோயாளிகள் உயிரிழப்பு!@ அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி

tamil.samayam.com :  வேலூர்மாவட்டம், அடுக்கம்பாறையில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லப்படும் குழாய் திடீரென வெடித்தது

இதனால் ஆக்சிஜன் கொள்கலனிலிருந்து குழாயின் வழியாக ஆக்சிஜன் வீணாக வெளியேறியத. இதனால் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காததால் காலை முதல் இதுவரையில் இம்மருத்துவமனையில் ராஜேஸ்வரி (68),பிரேம்(40) ,செல்வராஜ் (66),மற்றும் 28வயது மதிக்கதக்க பெண் உள்பட 5 பேர் பலியாகினர்.
உயிரிழப்பு எண்ணிக்கை உயரலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் நோயாளிகளின் உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்கும் வகையில் இருந்தது.
குழாய் பழுதின் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது தொழில்நுட்ப பணியாளர்கள் அதனை சரிசெய்யும் பணியிலும் ஆக்சிஜனை வேன் மூலம் நிரப்பும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலிருந்து வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு அவசர ஊர்திகள் மூலம் நோயாளிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக