திங்கள், 19 ஏப்ரல், 2021

அமித்ஷா : கொரோனாவைவிட தேர்தல் அரசியலே எங்களுக்கு முக்கியம் : பத்திரிகையாளர் சந்திப்பில் உண்மையை ..

kalaingarseythikal : தேர்தல் பிரச்சாரத்தையும், கொரோனா பரவல் அதிகரிப்பையும் இணைத்து பேசாதீர்கள்” என கொரோனா பரவல் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றின் அபாயகரமான பரவல் காரணமாக தமிழகம் உட்பட 16 மாநிலங்களில் நிலைமை மோசமாகி வருகிறது.                    மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், டெல்லி, சட்டீஸ்கர், கர்நாடகா, மத்தியபிரதேசம், கேரளா, தமிழ்நாடு, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஒவ்வொரு நாளும் 80 முதல் 82 சதவீத புதிய நோயாளிகள் கொரோனாவால் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.                        இதனால் மாநிலத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசு முடிவு செய்தது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அதேவேளையில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் போதிய கட்டுப்பட்டாடு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது

மேலும் கொரோனா தொற்று பரவல் உச்சக்கட்டத்தை அடையும் சூழலில், பிரதமர் மோடி தனது தேர்தல் ஆதாயத்திற்காக தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்யாமல் தொடர்வதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக மத்திய அமைச்சர் அமித்ஷாவின் மேற்கு வங்க பிரச்சாரக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்களை கூடியதை அடுத்து இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதால் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.கவினர் கொரோனாவை பரவிப்பி விடுதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் கொரோனாவைத் தேர்தலுடன் தொடர்புப்படுத்துவது சரியல்ல மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தேர்தல் நடத்ததாத மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அதற்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? கொரோனா வைரஸ் தொற்று பெருமளவில் அதிகரித்து வருவதை தேர்தலுடன் தொடர்புப்படுத்துவது சரியல்ல. எனவே தேர்தல் பிரச்சாரத்தையும், கொரோனா பரவல் அதிகரிப்பையும் இணைத்து பேசாதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார். அமித்ஷாவின் இத்தகைய கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக