திங்கள், 5 ஏப்ரல், 2021

இந்திய பத்திரிகை உலகத்திற்கு ஒரு கரிநாள் ! ஐந்து பாரம்பரிய நாளிதழ்களின் தற்கொலை

இந்திய பத்திரிகை உலகத்திற்கு  ஒரு கரிநாள்
பணத்திற்காக பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் வானொலிகள் நாணயத்தை  சமரசம் செய்துகொள்வது ஒன்றும் புதிதில்லை!
ஆனால் இந்த ஐந்து முக்கிய தமிழ் நாளிதழ்களின் முதல் முழுப்பக்க விளம்பரம் என்பது ஒரு சாதாரண சமரசம் அல்ல.
எல்லா ஊடக அறங்களையும் காலில் போட்டு மிதித்து விட்ட செயல் இது. .
ஒரு சாதாரண பத்திரிகைகள் இந்த கேவலமான செயலை செய்திருந்தால் அதை புரிந்து கொள்ள முடியும்.   கடந்து போகவும் முடியும்.
ஆனால் இங்கே நடந்திருப்பது,
நூற்றாண்டுகளை கடந்த ஊடக பாரம்பரியத்திற்கு சொந்தக்காரர்கள் என்று பெருமைப்படும் சிகரங்களின் தற்கொலை அல்லவா இவை?
இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் இந்து பத்திரிக்கை குழுமங்கள் சாதாரண காளான் பத்திரிகைகளா?
நூறாண்டுகளாக கட்டிக்காத்த நற்பெயரை இழக்கவும் இவர்கள் துணிந்து விட்டார்கள்.

இவர்கள் வெறும் விளம்பர பணத்திற்காக மட்டும் இந்த ஈன செயலில் இறங்கவில்லை என்பதை என்னால் துணிந்து கூற முடியும்.
இவர்கள் நன்றாக தெரிந்தே இவை வெறும் விளம்பரங்கள் என்ற அளவுக்கு காட்டி வேஷம் போடுகிறார்கள்!
இவர்கள் செய்வது பொய்ப்பிரச்சாரம்  இது வெறும் விளம்பரம் அல்ல.

இவர்களின் பூணூல் இந்த ஈனச்செயலை செய்ய வைத்திருக்கிறது.
கோயில்களை மீண்டும் கொள்ளை அடிக்கவேண்டும் என்று பூணூல்கள் கூறுவதும் இந்த பத்திரிகைகளின் பிரச்சாரங்களும் வேறு வேறு அல்ல.

ஆயிரம் ஆண்டுகளாக கோயில்களை ஆண்ட பூணூல் பரம்பரை மீண்டும் முழுசாக ஆளத்துடிக்கிறது.
கை நழுவி போய்க்கொண்டிருக்கும் ஆரிய ஆதிக்கத்தை மீண்டும் பிடித்து விடமுடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு தற்போது துளிர் விட்டிருக்கிறது.
வடஇந்திய பாஜகவின் ஆதிக்கம் திராவிடத்தையும் விழுங்கி விடும் என்று இந்த பூணூல் பத்திரிகைகளும் அவர்களின் அடிமை பத்திரிகைகளும் ஓரளவு நம்ப தொடங்கி உள்ளன.

அந்த பேராசையின் வெளிப்பாடுதான் எந்த வித நாணமும் அற்று ஒரு ஊடக விபச்சாரத்திற்கு இணையான தொழிலை செய்ய இவர்களை தூண்டி இருக்கிறது        
இந்து பத்திரிகை வார இதழாக 1878 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது
பின்பு நாளிதழாக 1889 இல் இருந்து வரத்தொடங்கியது
இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில பத்திரிக்கை 1932 தொட்டகுணப்பட்டது .இரண்டு வருடங்களுக்கு பின்பாக வர்களின் தமிழ் பதிப்பான தினமணி 1934 இல் தொடங்கப்பட்டது.
நூற்றாண்டுகளை கடந்து இன்று வரை இந்த பத்திரிகைகள் வெற்றிகரமாக மக்கள் மத்தியில் புகழ் பெற்று இருக்கிறார்கள் என்றால்,

இந்த சாதனை சாதாரணமானதா?
இவர்கள் உலக அளவில் புகழ் பெற்ற பத்திரிகைகள் அல்லவா?
இரண்டாவது உலகமகா யுத்த காலங்களில் சொந்தமாகவே விமானம் வைத்திருந்து அதில் சென்னையில் இருந்து கோவைக்கு தினசரி இந்து பத்திரிகையை விநியோகித்தார்
 ( அப்போது அதன் பைலட்டாக இருந்தவர் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தந்தை முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக்)
தமிழ் நாட்டின் எல்லா அதிகாரங்களையும் வளங்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து சாதாரண மக்களை மனு அதர்ம கோட்பாட்டின் படி ஆண்டு கொண்டிருந்தனர் இவர்கள்.

திராவிட எழுச்சியில் இந்த ஆரிய ஆதிக்கவாதிகள் தங்கள் ஆதிக்கத்தை ஒவ்வொரு துறையிலும் இழந்து கொண்டே வந்தார்கள்
சாதாரண மக்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் உயர்ந்தே வருகிறார்கள்
இவர்களால் இதை காண சகிக்க முடியவில்லை

இதுதான் இவர்களின் இலக்கு.
எப்படியாவது இந்த தேர்தலில் பாஜக அதிமுகவின் ஆட்சி மீண்டும் வந்தால் தங்களின் பூணூல் ஆட்சியை மீண்டும் கொண்டுவந்துவிடலாம் என்று நம்புகிறார்கள்.

இந்த ஒரே காரணத்திற்காகவே தங்களின் நூற்றாண்டு நற்பெயர் போனாலும் போகட்டும் பூணூல் ஆளட்டும் என்று முடிவுக்கு வந்துள்ளார்கள்        .. செல்லபுரம் வள்ளிம்மை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக