செவ்வாய், 6 ஏப்ரல், 2021

இபிஎஸ் - ஓபிஎஸ் பிரிவார்கள்.. பல தமிழக சிறுகட்சிகள் பாஜகவாக மாறிவிடும் ?

அரசியல்

Hemavandhana - tamil.oneindia.com : சென்னை: "இபிஎஸ் - ஓபிஎஸ் பிரிவார்கள்.. எடப்பாடியின் பிடியிலிருந்து அதிமுக விடுபட்டு மேலும் வகுப்புவாத அரசியலை நோக்கி நகரும்...
பாமகவை பாஜகவில் இணைக்கும்படி டெல்லியிலிருந்து அழுத்தம் வருவதாக செய்திகள் வெளியாகும்.. கமல் மறுபடியும் சினிமாவில் நடிக்க போயிடுவார்..
தமிழக கருத்தியல் களம் சமூகநீதியா? சனாதனமா?எனத் தெளிவாக அணிபிரியும்" என்று தேர்தலுக்கு பிறகு உள்ள அரசியல் சூழலை தன்னுடைய கணிப்பாக ரவிக்குமார் எம்பி வெளிப்படுத்தி உள்ளார். தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது.
திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி நடக்கிறது..
5 பேர் முதல்வர் வேட்பாளர்களாக களத்தில் இருக்கிறார்கள். இருந்தாலும் வழக்கம்போல திமுக, அதிமுக இரு ஜாம்பவான்கள் இடையே கடும்போட்டி எழுந்துள்ளது..
ஆட்சியை பிடித்து முதலமைச்சராக ஆள போவது யார் என்ற எதிர்பார்ப்பும் எகிறி வருகிறது..
எப்போதும் தேர்தல் சமயங்களில் எழக்கூடிய எதிர்பார்ப்பு இது என்றாலும், இந்த முறை கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.
அத்துடன் அவர் விடவில்லை.. தன் கட்சியினரை தட்டி எழுப்பும் வகையில் இன்னொரு ட்வீட்டையும் பதிவிட்டுள்ளார்..
"தேர்தலுக்குப் பிறகுதான் நமக்கு வேலை அதிகமாக இருக்கிறது.
தோழர்களே! சனாதனத்துக்கு எதிரான கருத்தியல் படைக்கலன்களைத் தயார்படுத்துங்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பின்னப்பட்ட வகுப்புவாத வலைப்பின்னலை அடையாளங்கண்டு அறுத்தெறிவதே நமது முதன்மையான பணியாக இருக்கட்டும்" என்று கூறியுள்ளார்.

ஆனால் தேர்தல் முந்தைய கணிப்பு இல்லை.. தேர்தலுக்கு பிந்தைய கணிப்பும் இல்லை..
தேர்தலுக்குப் பிறகு அரசியலில் என்னென்ன காட்சிகள் அரங்கேறும் என்ற கணிப்பை வெளிப்படுத்தியுள்ளார்..
நாளைக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், ரவிக்குமாரின் இந்த கணிப்புகள் தவிர்க்க முடியாத மற்றும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது..
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்கள் இதுதான் "தேர்தல் முடிவுகள் வெளியாகி திமுக ஆட்சி அமைந்தபிறகு பின்வரும் காட்சிகள் அரங்கேறக்கூடும்.
1.கமல் மீண்டும் திரைத்துறையில் கவனம் செலுத்தக் கிளம்பிவிடுவார். மநீமவில் தற்காலிக தஞ்சம் புகுந்த சிலர் பாஜகவுக்கு செல்வார்கள்.
2. பாமகவை பாஜகவில் இணைக்கும்படி டெல்லியிலிருந்து அழுத்தம் வருவதாக செய்திகள் வெளியாகும். 3. இபிஎஸ் - ஓபிஎஸ் பிரிவார்கள். எடப்பாடியின் பிடியிலிருந்து அதிமுக விடுபட்டு மேலும் வகுப்புவாத அரசியலை நோக்கி நகரும்
4. தமிழகக் கருத்தியல் களம் சமூகநீதியா? சனாதனமா? எனத் தெளிவாக அணிபிரியும். தேர்தலுக்குப் பிறகுதான் நமக்கு வேலை அதிகமாக இருக்கிறது.
தோழர்களே சனாதனத்துக்கு எதிரான கருத்தியல் படைக்கலன்களைத் தயார்படுத்துங்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பின்னப்பட்ட வகுப்புவாத வலைப்பின்னலை அடையாளங்கண்டு அறுத்தெறிவதே நமது முதன்மையான பணியாக இருக்கட்டும்" என்று ரவிக்குமார் பதிவிட்டுள்ளார்

தோழர்களே...! அத்துடன் அவர் விடவில்லை.. தன் கட்சியினரை தட்டி எழுப்பும் வகையில் இன்னொரு ட்வீட்டையும் பதிவிட்டுள்ளார்..
"தேர்தலுக்குப் பிறகுதான் நமக்கு வேலை அதிகமாக இருக்கிறது. தோழர்களே! சனாதனத்துக்கு எதிரான கருத்தியல் படைக்கலன்களைத் தயார்படுத்துங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பின்னப்பட்ட வகுப்புவாத வலைப்பின்னலை அடையாளங்கண்டு அறுத்தெறிவதே நமது முதன்மையான பணியாக இருக்கட்டும்" என்று கூறியுள்ளார்.

இந்த முறை தேர்தலிலும், வழக்கம்போலவே திருமாவளவனின் பிரச்சாரங்கள் அனல் தெறித்தன.. வழக்கம்போலவே இந்த முறையும் பாஜகவை உண்டு, இல்லை என செல்லுமிடமெல்லாம் போட்டு தாக்கி கொண்டிருந்தார்..
 "பாஜகவை இங்கே காலூன்ற விட்டுவிடக்கூடாது, சின்ன கட்சிதானே, அந்த கட்சிக்கு என்ன வாக்கு வங்கி இருக்கிறது என்று கணக்கு போடாதீங்க.. இங்குதான்
நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.

திமுக கூட்டணி நான் 6 சீட் திமுக கூட்டணியில் வாங்கி கொண்டதற்கு காரணமே, பாஜக எக்காரணத்தை கொண்டும் இங்கே வேரூன்றி விடக்கூடாது என்பதற்காகத்தான்" என்று திருமாவின் பிரச்சாரங்கள் முழுக்க பாஜக நெடியே மூக்கை துளைத்த நிலையில், அதையேதான் இன்றைய ரவிக்குமாரின் ட்வீட்களும் பிரதிபலிக்கின்றன..
பொழுது விடிந்தால் தேர்தல் உள்ள நிலையில், ரவிக்குமாரின் இந்த அரசியல் கணிப்புகள் மிகப்பெரிய தாக்கத்தை மக்கள் மனசில் ஏற்படுத்தி வருவதாகவே தெரிகிறது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக