திமுக எம்.பி கனிமொழி கொரோனா தொற்றிலிருந்து மீண்டார்
maalaimalar :
சென்னை:
தி.மு.க. எம்.பி.யான கனிமொழி தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
அவரது உடல்நிலையில் சோர்வு ஏற்பட்டதால் பிரசாரத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். சென்னையில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. உடனடியாக ஆழ்வார்பேட்டை வீட்டில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
இதற்கிடையே, நேற்று மாலை முழு கவச உடையுடன் வந்து சட்டசபை தேர்தலில் தனது வாக்கைப் பதிவுசெய்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக