புதன், 7 ஏப்ரல், 2021

இலங்கையில் 10 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடை விதித்தது இலங்கை அரசு

IBC tamil :ஐ.ஸ், அல் குவைதா உட்பட பிரிவினைவாத இஸ்லாமிய அமைப்புக்கள் மீது இலங்கை அரசாங்கம் இன்று அதிரடி தடை உத்தரவை அறிவித்துள்ளது.இவர்களில் 11 அமைப்புக்கள் இருப்பதோடு அதிக அமைப்புக்கள் இலங்கைக்குள் செயற்படுவதாக காணப்படுகின்றன.சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இந்த அமைப்புக்களை தடை செய்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக அவரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷார ஜெயரத்ன தெரிவித்தார்.இதன்படி தடை செய்யப்பட்டுள்ள அமைப்புக்களின் விபரங்கள்வருமாறு,ஐக்கிய தவ்ஹீத் ஜமாத் (UTJ)

சிலோன் தவ்ஹீத் ஜமாத் (CTJ)

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ)

அகில இலங்கை தவ்ஹீத் ஜமாத் (ACTJ)

ஜம்மியதுல் ஹன்சாரி துன்னத்துல் முகமதியா (JASM)

தாருல் அதர் @ ஜம் உல் அதர்

இலங்கை இஸ்லாமிய மாணவ அமைப்பு / ஜமியா (SLISM)

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு (ISIS)

அல் குவைதா (AL-Qaeda) அமைப்பு

சேவ் த பர்ல்ஸ் அமைப்பு (Save the pearls)

சூப்பர் முஸ்லிம் அமைப்பு (Super Muslim)

ஏற்கனவே புலம்பெயர்ந்த 7 தமிழர் அமைப்புக்களும் 338 தனிநபர்களுக்கும் இலங்கை அரசாங்கம் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக