Swaminathan V வைத்திலிங்கம் : குஜராத் - உண்மை நிலைமையை மூடி மறைத்தாலும், தவறான தரவுகள் தந்து , முதன்மை மாநிலம், முன்னேறிய மாநிலம் என்று மூச்சு முட்ட ஊதிப் பெருக்கி பொய்யுரை பகன்றாலும் என்றாவது ஒருநாள் மாய பிம்பம் உடைந்து, உண்மை நிலவரம் வெட்ட வெளிச்ச மாகிவிடும்.
பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் கொரோணா நோயினால் உயிர் நீத்த பிணங்கள் குவிந்து கிடக்கும் மோசமான நிலை.
தான் ஆளும் மாநிலத்தையே சீர்திருத்த முடியாத பாஜக, திறமையுடன் பரிபாலனம் செய்து தமிழ்நாட்டை முன்னேறிய முதன்மை மாநிலமாக கட்டமைத்த கழக ஆட்சிகளை அகற்ற திட்டமிடுவது வெட்கக் கேடான செயல்.
தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு எல்லா சுகங்களையும் அனுபவிக்கும் மெத்தப் படித்த துக்ளக் மேதாவிகள் உண்மை நிலவரத்தை உணர்ந்து இனியாவது கழக ஆட்சியில் தமிழ்நாடு கெட்டு குட்டிச் சுவராகிவிட்டது என்று ஒப்பாரி வைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக