வெள்ளி, 16 ஏப்ரல், 2021

கவிதா சொர்ணவல்லி : ரஞ்சித் சங்கிகள் - நாய் டம்பளர்கள் - அதிமுக அடிமைகள் & நடுநிலை நக்கீஸ்.

May be an image of 2 people and text that says 'John Thomas Elumalai'

கவிதா சொர்ணவல்லி : 90-களின் பிற்பகுதில காஞ்சிபுரத்துல உள்ள தலித் மக்கள்,  
அங்க பிற சாதி ஆட்களால் பயபடுத்தபட்டுட்டு இருந்த பஞ்சமி நிலங்களை மீட்கிறதுக்காக போராட்டம் நடத்துறாங்க.
போராட்டத்தின் ஒரு பகுதியா நாலரை ஏக்கர் நிலத்தை மீட்டு, அங்க விவசாயம் செய்ய ஆரம்பிக்கிறாங்க தலித் மக்கள்.
ஆட்சியாளர்கள் உடனே, அந்த மக்களை அடிச்சு விரட்டுறாங்க.
இதைக் கண்டிச்சு ஆட்சியர் அலுவலகம் முன்னாடி  போராட்டம் நடத்துறாங்க. உடனே போலீஸ் துப்பாக்கி சூடு நடத்துது. அதுல இரண்டு தலித் இளைஞர்கள் பலியாகுறாங்க.
துப்பாக்கிச் சூட்டுல பலியான ஏழுமலைக்கு வெறும் 21 வயது தான். திருமணம் ஆகலை. பலியான இன்னொருத்தர், 25 வயதான ஜான் தாமஸுக்கு திருமணமாகி ஒன்பது மாதக் கைக்குழந்தை இருந்தது.
சரி.. இந்தப் படுகொலைகள் எந்த ஆட்சியில நடந்த்துசுன்னு தெளிவா தெரியனுமா ?
1994-வருடம். ஜெயா ஆட்சியில. அதிமுக ஆட்சியில.
இறந்தது பறையர்கள்.
இதப் பத்தி இங்க உள்ளவனுங்க என்னைக்காத்து பேசி பாத்திருக்கீங்களா? பாத்துருக்க மாட்டீங்க ?


ஆனா, பஞ்சமி நிலம் பத்தி அதிகமா பேசி கேட்ட மாதிரி உணர்விருக்கும் உங்களுக்கு.
ஆமா... முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்துல இருக்குதுன்னு சங்கிகள் அடிச்சு விட்ட பொய்யைத் தூக்கிட்டு வந்து பேசிட்டு இருப்பானுங்க.
ஆனா,  தலித்துகளை குந்தாங்கொலையா கொன்னுபோட்ட அதிமுக பத்தி பேச மாட்டானுங்க.
சரி இந்த் ரஞ்சிதாவது இத வச்சு படம் எடுப்பானா  ? மாட்டான்.
ஆனா மும்பைல போயி அங்க இடம் கேட்டு போராடுற மாதிரி படம் எடுப்பானுங்க.  
இதுதான், இவனுங்களோட தைரியம். அம்மான்னா, ஒடுங்கி உக்காந்து சரணம் போட்டுருவானுங்க.
ஆனா எல்லாக் கலவரத்தையும் திமுக தலைல சுமத்தி, அதிமுகவுக்கு புனிதர் பட்டம் வழங்கி, குளிர் காய சொல்லிக் கொடுக்கிறது நாக்பூர் சங்கிகள்.  அதுக்கு விலை போறது பூராம் ரஞ்சித் சங்கிகள்
😋 நாய் டம்பளர்கள்
😋 அதிமுக அடிமைகள்
😋 &  நடுநிலை நக்கீஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக