திங்கள், 12 ஏப்ரல், 2021

கர்ப்பமாக இருக்கும்போதே மீண்டும் கருத்தரித்த இங்கிலாந்து பெண்.. இது எப்படி சாத்தியம்!

கர்ப்பமாக இருக்கும்போதே மீண்டும் கருத்தரித்த இங்கிலாந்து பெண்.. இது எப்படி சாத்தியம்!
tamil.news18.com : சில அரிதான சந்தர்ப்பங்களில், கருப்பையின் சாளரம் திறந்தே இருக்கும். எனவே, ஒரு பெண் உடலுறவில் ஈடுபடும் போது, அவர் தொடர்ந்து கருமுட்டைகளை வெளியேற்றுவதால் அவரால் மீண்டும் கருத்தரிக்க முடியும். இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண் தனது கர்ப்பகாலத்திலேயே எதிர்பாராத விதமாக மீண்டும் கருத்தரித்த சம்பவம் சற்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் வசித்து வரும் ரெபேக்கா என்பவர் மற்ற தாய்மார்களை போலவே தனது முதல் குழந்தையை பெற்றெடுக்க போகும் சதோஷத்தில் இருந்துள்ளார். இருப்பினும், எதிர்பாராத விதமாக நடந்த சம்பவம் அனைவரைவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது தனது முதல் குழந்தை கருவில் இருக்கும்போதே அவர் இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார். இதில் முதல் குழந்தை கருத்தரித்து சரியாக 3 வாரங்கள் இடைவெளியில் இரண்டாவது குழந்தை கருத்தரித்துள்ளது.

இதையடுத்து ரெபேக்கா மற்றும் அவரது கணவர் ரைஸ் வீவர் இப்போது இரட்டையர்களுக்கு பெற்றோர்களாக உள்ளனர். குழந்தைகளுக்கு நோவா மற்றும் ரோசாலி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வைரல் சம்பவத்தால் இரு குழந்தைகளும் இன்ஸ்டாவில் வைரலாகி வருகின்றனர். இரட்டையர்கள் நோவா மற்றும் ரோசாலி ஆகியோர் 'சூப்பர்ஃபெட்டேஷன் இரட்டையர்கள்' என்று அழைக்கப்படுகின்றனர். மேலும் இது போன்ற கருத்தரித்தல் மிகவும் அரிதாகவே நடைபெறும் என்றும், உலகளவில் இதுபோன்று 14 இரட்டையர்கள் மட்டுமே உள்ளனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன... இது எப்படி நடந்தது?

கருவுறுத்தலுக்காக பல வருடம் சிகிச்சை மற்றும் மருந்துகள் எடுத்துக்கொண்ட பிறகு ரெபேக்கா முதல் முறையாக கருவுற்றிருந்தார். பின்னர் தனது 12வது வார காலத்தில் நடத்தப்பட்ட 3வது அல்ட்ராசவுண்டிற்குச் சென்றபோது அவருக்குள் மற்றொரு குழந்தை கருத்தரித்திருப்பதை பற்றி அவரிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இப்போது இணையத்தில் வைரலாகிவிட்ட இந்த கதை பலரால் ஷேர் செய்யப்பட்டுள்ளது. மக்கள் இந்த சம்பவத்தை அசாதாரணமான மற்றும் கவர்ச்சிகரமானதாகக் கூறி வருகின்றனர். சமீபத்தில் ஒரு நேர்காணலில் ரெபேக்கா கூறியதாவது, தனது நிலைமை எவ்வாறு டாக்டர்களைக் குழப்பியது என்பதையும் பற்றி பேசினார்.

ஒரு குழந்தைக்கு பதிலாக இரண்டு குழந்தைகள் இருப்பதாகக் கூறப்படுவது உண்மையில் அதிர்ச்சியாக இருந்தது. அதிலும் இரண்டு குழந்தைகளுக்கும் மூன்று வார அளவு வித்தியாசம் இருப்பது எப்படி என்பதை மருத்துவர்களாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை என்று அவர் கூறினார். சிறிது நேரத்திற்குப் பிறகு, அவரது OB-GYN மூலம் கர்ப்பத்தை ஒரு 'சூப்பர்ஃபெட்டேஷன்' (superfetation) என்று கண்டறிந்துள்ளனர். இருப்பினும் இது அரிதாக நடக்கும் செயலாக கருதப்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதல் கர்ப்ப காலத்தில் கருமுட்டைகள் இரண்டு வெவ்வேறு நேரங்களில் கருப்பையில் இருந்து வெளியேறும் போது ஒரு புதிய கர்ப்பம் நிகழும் வாய்ப்புகள் இருப்பதை மருத்துவர்கள் விளக்கியுள்ளனர்.

 கர்ப்பமாக இருக்கும்போது உண்மையில் மீண்டும் கருத்தரிக்க முடியுமா?

சூப்பர்ஃபெட்டேஷன் தொழில்நுட்ப ரீதியாக இது ஒரு அரிதான நிகழ்வுகளாக கருதப்படுகிறது. இருப்பினும், ஒரு பெண் ஏற்கனவே ஒரு குழந்தையுடன் கர்ப்பமாக இருக்கும்போது மற்றொரு குழந்தையை கருத்தரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

மேலும் இது இரட்டைக் குழந்தைக்கு வழிவகுக்கிறது. பொதுவாக, ஒரு பெண் கருத்தரிக்கும் போது தற்காலிகமாக கருப்பையில் இருந்து முட்டைகளை வெளியேற்றுவதை நிறுத்திவிடுகிறார். அதேபோல பிந்தைய கருத்தரித்தல், ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவை மற்றொரு கருவின் வளர்ச்சியை எளிதாக்குவதில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆனால் சில அரிதான சந்தர்ப்பங்களில், கருப்பையின் சாளரம் திறந்தே இருக்கும். எனவே, ஒரு பெண் உடலுறவில் ஈடுபடும் போது, அவர் தொடர்ந்து கருமுட்டைகளை வெளியேற்றுவதால் அவரால் மீண்டும் கருத்தரிக்க முடியும். இதைத்தான் மருத்துவர்கள் additional ovulation என்று குறிப்பிடுகிறார்கள். எளிமையாகச் சொல்வதானால், மஸ்கஸ் பிளக், கரு லைனிங் மற்றும் ஹார்மோன்கள் போன்ற தானியங்கி இனப்பெருக்க பாதுகாப்பு விஷயங்கள் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது அவர் கருமுட்டைகளை வெளியேற்றுவதைத் தடுக்கும். அதுவே, ஒரு சூப்பர்ஃபெட்டேஷன் கர்ப்பத்தின் போது மேற்கண்ட அனைத்தும் வேலை செய்யாது. எனவே, மீண்டும் கருத்தரிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.


மேலும் இந்த சந்தர்ப்பத்தில் முட்டைகள் வெவ்வேறு கால இடைவெளியில் கருவுற்றிருந்தாலும், ஒரு மேலோட்டமான கர்ப்பத்தின் மூலம் கருத்தரிக்கப்பட்ட குழந்தைகள் ஒரே நேரத்தில் பிறக்கின்றன. இளைய கருவும் ஏற்கனவே தோன்றிய கருவில் இணைந்து ஒன்றாக வளரும். மேலும் அவை இரண்டும் இரட்டையர்களைப் போலவே வளர ஆரம்பிக்கின்றன. இருப்பினும், வித்தியாசம் என்னவென்றால், இரட்டையர்கள் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள் என்பது தான். இந்த சூப்பர்ஃபெட்டேஷனுக்கு என்ன காரணம் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், மரபணு அசாதாரணங்கள் மற்றும் பிற தொடர்புடைய காரணங்களை ஆகியவை நிராகரிக்கப்பட்டுள்ளன. இது ஒரு குழப்பமான மர்மமாகவே இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக