வெள்ளி, 30 ஏப்ரல், 2021

அறிஞர் ஜெயரஞ்சனுக்கு பசுமை விகடன் சவால்! சமூகவலையில் அனல் பறக்கும் விவாதங்கள் (`பொருளாதார புலி' ஜெயரஞ்சனுக்கு பசுமை விகடனின் பகிரங்க சவால்!)

`பொருளாதார புலி' ஜெயரஞ்சனுக்கு பசுமை விகடனின் பகிரங்க சவால்!

Dev JB : உன்னோட விவாதத்துக்கு எதுக்கு ஜெயரஞ்சன் வரனும்.
நம்ம கூட ஒரு விவாதம் வையேன். முதல் கேள்வி கடந்த 3 ஆண்டுகளில், ஏக்கருக்கு 20 லட்சம் எடுக்கலாம் போன்ற அட்டைப்படங்களில் வந்தவர்களை மட்டும் கூப்பிடு போதும். மீதியை நாங்க பாத்துகிறோம்.
Terms of Trade - இது அடுத்த விவாததலைப்பு.
எப்ப, எங்க வச்சுக்கலாம்.
Karthick Ramasamy  : தைரியம் இருந்தால் அவருடன் நேரடியாக விவாதிக்க முன்வாங்க
சவால்னு விட்டா போதுமா?

லால்குடி ஆஸ்டின் : போலி விவசாயம் பற்றி கதை எழுதி கோடி கணக்குல பணம் சம்பாரிச்ச திருட்டு பய பசுமை விகடன். பேச்சை பாரு.
Sadhu Sadhath  :ஆட்டுகுட்டி அண்ணாமலைய ப்ரமோட் செஞ்ச பசுமை விகடன் இப்போது ஆட்டுகுட்டியார் பற்றி புட்டு புட்டு வைப்பார்
Sadhu Sadhath  : ஏம்பா நேத்து 85 வயசு கொராணா கிழவன் தன்னுடைய பெட்ட இளைஞருக்கு கொடுங்கனு சொல்லிட்டு வீட்டுக்கு போய்ட்டாருனு Fake News போட்ட மூதேவிங்க தானடா நீங்க ..
இப்ப என்னடா நல்லவனாட்டம் நடிக்கிறீங்க
Ravi Kathiresan  : நீங்கள் விவசாயிகளின் மேல் அக்கறை கொண்டவர்களாக இருந்தால்...உரவிலை ஏற்றம், விவசாயகூலிப்பிரச்சனை, தரகர்கள் மற்றும் வியாபாரிகளின் ஏமாற்றுவேலை இதைப் பற்றி கட்டுரை பிரசுரித்துள்ளீர்களா? அடிப்படை பிரச்சனையை பற்றி பேசாமல்...கறுப்பு பண ஒழிப்பு பற்றி ஷங்கர் பிரமாண்டமாய் , பள பள வென..படம் எடுப்பது போல் நொந்து காய்ந்து போயிருக்கும் விவசாயியைப்பற்றி பள பள வென ஒரு இதழை வெளியிடுவது ஆகச் சிறந்த நகைமுரண்Nandha Kumar  : பொருளாதார புலி , என்ன நக்கலா விகடன், நீங்க சொல்லட்டியும், அவரு புலி தான், பொருளாதாரம் படிக்காதவங்களுக்கு அதை அவர் தான் புரிய வச்சார். நானெல்லாம் உங்க ஆனந்த விகடன் நெடுங்காலம் வாசகன்னு சொல்றது கஷ்டமா இருக்கு
Dravidian Stock :போட்ட கமென்ட் டெலீட் பண்றான்.. பெரிய கருத்து சுதந்திர புடுங்கிமாரி பேசுவான் வெளிய!

Anbarasan Muthuswamy : Government வேலைக்கு எங்கப்பா வந்ததினால் ஒராளவுக்கு எங்களை படிக்க வைத்து தற்போது நானும் ஒரு குருப் b அதிகாரியாக govt organization la வேலைக்கு போறேன். ஆனால் விவசாயத்தை மட்டும் நம்பிய என் சித்தப்பா மகன்கள் பொருளாதாரத்தில் ஒரு முன்னேற்றமும் இல்லை.
Praveen Raj Boopathy  : அடே சங்கி விகடா!
உன்னை போன்ற ஏமாற்றுக்காரங்களுக்கு அவ்வளவு தான் மரியாதை.
Chellappan Karuppiah  : மனுஷனுக்கு இரண்டு கல்லீரல் இருக்குன்னு எழுதினியே அத மொதல்ல நிரூபி.. அப்புறம் சவால் விடலாம்
Praveen Kumar : அவர் மீதான உங்களின் விமர்சனம் அவர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி கொண்டதாக இருக்கிறது. உண்மையை சொல்லுங்கள் உங்கள் குழும பத்திரிக்கைக்கு அவர் கட்டுரை அல்லது தொடர் எழுதி தர மறுத்து விட்டாரா? அந்த காழ்புணர்ச்சியில் உளறுகிறீர்களா?
Anbarasan Muthuswamy : விவசாயத்துல லாபம் இருந்தா விவசாயி ஏண்டா செக்யூரிட்டி வேலைக்கு போரன். எதுக்கு பிளாட் போட்டு விக்கிறான்
Selvarani Balaguru : தைரியம் இருந்தா நீங்க அவர் கூட விவாதிங்க.
அதுசரி அண்ணாமலை கதைகளை புரோமோட் பண்ணினவங்க தானே நீங்க..

ராஜன் வி  : பசுமை கும்பல் சார், உங்கள் பசுமை இதழை அவ்வப்போது படித்து இருக்கிறேன். ஜெயரஞ்சன் பேசியதை முழுமையாக கேட்டும் இருக்கிறேன். TOT விடுங்கள் ஆனால் விவசாயம் என்ற பெயரில் சில சங்கிகளை வளர்த்து விட்டது நீங்கள் தான்.
உங்கள் கும்பலும் சங்கிகள் பலர் நிறைந்த பார்ப்பன கும்பல் என்பது அனைவருக்கும் தெரியும்.
அதென்ன பொருளாதார புலி, அப்படி என்றால் நீங்கள் விவசாய பன்றிகளா?
எதேனும் பரபப்பு வேண்டும் எனில் வண்ணத்திரை போன்று ஆபாச பத்திரிக்கை நடத்துங்கள். விவசாயம் என்ற பெயரில் எதற்கு இந்த சங்கி தனம்
ராஜன் வி  :த்தா இவ்வளவு நாள் கோமா ல இருந்திங்களா விகடன் சங்கி சார்? அவர் பேசி எத்தன மாசம் ஆச்சு? இப்போ இத பேசுறாங்க பின்னாடி எவன் குடிய கெடுக்க இப்படி திசை திருப்பி விடுறானுகளோ?
Vinoth Poomuthu
MLM ப்ராடு பக்கி நீயெல்லாம் அவருக்கு சவால் விடுறியா


 Pasumai Vikatan : 'பொருளாதார புலி' ஜெயரஞ்சனுக்கு .. பசுமை விகடனின் பகிரங்க சவால்! வணக்கம்... திரு.ஜெ.ஜெயரஞ்சன், ஒரு நிகழ்ச்சியில் நீங்கள் பேசிய வீடியோ பதிவொன்று, சில மாதங்களுக்கு முன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டிருந்தது. அதில் தாங்கள் பேசிய விஷயங்களைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியுற்றோம். பசுமை விகடன் பத்திரிகையிலிருந்து நிருபர் தங்களிடம் பேசியதாகவும், விவசாயத்தில் நிறையபேர் செத்துக்கொண்டுள்ள சூழலில், விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதாகவே எழுதுகிறீர்கள். ஃபாரினிலிருந்து பணத்துடன் வந்திறங்கும் விவசாயி பற்றித்தான் எழுதுகிறீர்கள். இதெல்லாம் நியாயமா? என்று நிருபரிடம் கேட்டதோடு, Terms of trade (TOT) என்று விவசாயிகளுக்கும் விவசாயி அல்லாதவர்களுக்கும் நடக்கும் பண்டமாற்று பற்றிய கட்டுரை எழுதித் தருகிறேன் அதை வெளியிட முடியுமா என்று கேட்டதாகவும் பேசியுள்ளீர்கள். கூடவே, பசுமை விகடன் பற்றிக் கடுமையான விமர்சனத்தையும் அதில் வைத்துள்ளீர்கள்.

அந்த வீடியோவைக் கண்டதுமே பசுமை விகடன் நிருபர்களை அழைத்துப் பேசினோம். தங்களிடம் யாருமே பேசவில்லை என்று தெரிவித்தார்கள். ஒருவேளை விகடன் குழுமத்தில் உங்கள் பிற இதழ்களின் நிருபர்கள்கூட பேசியிருக்கலாம். ஆனால், யாரென்று எங்களால் கண்டறிய முடியவில்லை. எனவே, தாங்கள் கொடுப்பதாகச் சொன்ன Terms of trade (TOT) என்ற கட்டுரையை உடனடியாக அனுப்பி வையுங்கள் வெளியிடத் தயாராகவே இருக்கிறோம் என்று தங்களுக்குத் தொடர்ந்து தகவல் அனுப்பி வருகிறோம். ஆனால், தங்களிடமிருந்து பதிலே இல்லை. அந்தக் கட்டுரையைத் தாங்கள் அனுப்பி வைத்தால் பிரசுரிக்கத் தயாராகவே இருக்கிறோம்.
விவசாயத்தில் பிரச்னைகள் இல்லாமல் இல்லை. சொல்லப்போனால், பசுமை விகடனின் ஆரம்பகாலம் தொட்டே விவசாயப் பிரச்னைகளை முன்வைத்து அழுத்தம் நிறைந்த கட்டுரைகளை எழுதி வருகிறோம். விவசாயப் பொருளாதாரம் பேசும் பலரின் கருத்துகளும் இடம்பெற்றே வருகின்றன. விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வுகளைத் தேடித்தரும் வகையில் அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து பலவித நடவடிக்கைகளையும் எடுக்க வைத்து வருகிறோம்.
ஒருபக்கம் பிரச்னைகளைப் பேசும் அதேசமயம், விவசாயத்தை லாபகரமாகச் செய்துவரும் விவசாயிகளின் அனுபவங்களையும் அவர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களையும் பிறரும் பயன்படுத்தி வெற்றி பெறவே அத்தகைய கட்டுரைகள் இடம்பெறுகின்றன. நன்கு விசாரித்து, உறுதிப்படுத்திக்கொண்ட தகவல்களையே விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம். ஒருவேளை விவசாயிகளுக்குச் சந்தேகம் இருக்குமானால், பசுமை விகடனிலேயே சம்பந்தப்பட்ட விவசாயியின் தொடர்பு எண்களையும் கொடுத்து வருகிறோம். அவர்களும் நேரடியாகப் பேசி தெளிவுபெற்று வருகின்றனர்.
ஒருவேளை தங்களுக்கும் பசுமை விகடன் மகசூல் கட்டுரைகள் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருக்குமானால், சம்பந்தப்பட்ட விவசாயியின் தோட்டத்துக்கும் நாங்களே நேரடியாகத் தங்களை அழைத்துச் சென்று காண்பிக்கவும் தயாராக இருக்கிறோம். தங்களைப் போன்றவர்கள் பொதுவெளியில் பேசும்போது, அது பலரிடமும் சென்று சேர்கிறது. எனவே, தாங்கள் நேரடியாகத் தோட்டத்துக்குச் சென்று பசுமை விகடன் தகவல்களை உறுதிப்படுத்திக்கொண்டு, உண்மை என்ன என்று பேசும்போது, தங்களைப் பின்பற்றுபவர்கள் மட்டுமல்லாது பிறருக்கும் அது பயன்தருவதாக இருக்கும். எனவே தங்களை, உகந்த நாள், நேரத்தை ஒதுக்கித்தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அதேபோல தாங்கள் எழுதித் தருவதாகச் சொல்லியிருக்கும் கட்டுரையையும் விரைவாக அனுப்பி வைக்கவும்.
நன்றி!
ஆசிரியர், பசுமை விகடன்.
ஜெ.ஜெயரஞ்சன்... உங்களில் பலருக்கும் அறிமுகமானவராகத்தான் இருப்பார். `பொருளாதார அறிஞர்' என்கிற அடைமொழியுடன் பெரும்பாலான பத்திரிகைகள், டிஜிட்டல் மீடியாக்கள், தொலைக்காட்சிகளில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அதே ஜெயரஞ்சன்தான். சமீபத்தில், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியின் பிரசார மேடையில் அவருடைய பேச்சை மொழிபெயர்த்த பெருமையும் இவருக்கு உண்டு.
இப்படிப்பட்ட ஒரு `பொருளாதார புலிக்கு’, பசுமை விகடனிலிருந்து மேலே இருக்கும் கடிதத்தை அனுப்பி வைக்கும் நிலை ஏற்பட்டதற்கும், அதைத் தொடர்ந்து அவரிடமிருந்து பதில் கிடைக்கப்பெறாத சூழலில், விஷயத்தைப் பொதுவெளியில் பகிரும் நிலை ஏற்பட்டதற்கும் வருத்தமாகவே இருக்கிறது. ஆனாலும், பசுமை விகடன் பற்றி பொதுவெளியில் தான் எடுத்து வைத்திருக்கும் கருத்துகளுக்கு பதில் அளிக்காமல் இருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
இந்தியும் குஜராத்தியும் தெரிந்த பிரதமர் மோடிக்குக்கூட தன்னுடைய கருத்துகள் சென்று சேர வேண்டும் என்று நினைத்து, ஒரு டிவி விடாமல் போய் உட்கார்ந்துகொண்டு புள்ளிவிவரங்களை அள்ளி வைக்கும் ஜெயரஞ்சன், தான் சார்ந்திருக்கும் தமிழ்நாட்டில் அதுவும் ஒரு தமிழ்ப் பத்திரிகையின் மீது சேற்றை அள்ளி வீசிவிட்டு, அதற்குப் பதில் கேட்டால் வாயே திறக்காமலிருப்பது என்ன வகை மனநிலை?
முதலில், பசுமை விகடன் பற்றி அவர் எடுத்து வைத்திருப்பதைக் கருத்து என்றே சொல்லக் கூடாது. பசுமை விகடனின் தன்மானத்தை உரசிப் பார்த்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு நாலாந்தர பேச்சாளரின் நடையில்தான் அந்த வீடியோவில் அவர் பேசியிருக்கிறார். `இந்தப் பசுமை விகடன்காரனுங்க இருக்கானுங்கள்ல' என்று ஆரம்பித்து, ஒருமையில் விளித்து மிகமிகக் கேவலமாகவே பேசியிருக்கிறார். பசுமை விகடனை மட்டுமல்ல, எல்லோரையுமே இப்படி சகட்டு மேனிக்குப் பேசுவதைத்தான் வாடிக்கையாகவே வைத்திருக்கிறார். சரி, வயது முதிர்ச்சி காரணமாகத்தான் அப்படிப் பேசியிருக்கிறார் என்று அதைக் கடக்கலாம் என்று பார்த்தால், அறிவு முதிர்ச்சியும் இருக்கிறதா என்கிற சந்தேகமே எட்டிப்பார்க்கிறது.
உண்மையிலேயே அவர் பசுமை விகடனைப் படித்திருக்கிறாரா?
ஏன், படித்தால்தான் குறை சொல்ல வேண்டுமா என்று ஒரு கேள்வி வரலாம்.
கேள்விப்பட்ட விஷயத்தை வைத்துக்கூட குறை சொல்லலாம். அது போகிற போக்கில் யாரோ ஒருவர் செய்யக்கூடிய செயல். ஆனால், அரசாங்கத்தையும் ஆட்சியாளர்களையும், அரசியல்வாதிகளையும், மீடியாக்களையும் விமர்சிக்கவும் கேள்வி கேட்கவும் கூடிய பொறுப்புமிக்கவராகத் தன்னைக் காட்டிக் கொண்டு வலம் வருபவர், நிச்சயமாகக் கேள்விப்பட்ட விஷயங்களையெல்லாம் வைத்துக்கொண்டு இஷ்டம்போல பேசவே கூடாது. படித்தறிந்து, தெளிந்துதான் பேச வேண்டும்.
அதே வீடியோவில் இதை அவரே தெளிவாகச் சொல்லவும் செய்கிறார் (அவர் பேசிய முழுமையான வீடியோவில் இது இடம்பெற்றுள்ளது. ஆனால், பசுமை விகடன் மீது புழுதிவாரித் தூற்றுவதை மட்டும் தனியாக வெட்டி சிலர் பரப்பிக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு என்ன உள்நோக்கமோ தெரியவில்லை). அதாவது, கிராமிய பொருளாதார அறிஞர் ஜே.சி.குமரப்பா குறித்து ஒருவர் கேட்கிறார். `நான் ஜே.சி. குமரப்பா பற்றி படிக்கவில்லை. மன்னிக்கணும். எனக்கு ஒத்து வரலனா கூட படிச்சிருக்கணும். படிக்காம விட்டுட்டேன்' என்று அழகாகக் கடக்கிறார். அதேபோல, பசுமை விகடன் பற்றியும் முழுமையாகத் தெரிந்துகொண்டுதானே பேசியிருக்க வேண்டும்.
பசுமை விகடனில் விவசாயிகளின் பிரச்னைகளை எழுதுகிறீர்களா என்று கேட்டிருக்கிறார். பசுமை விகடனின் மிகமிக முக்கியமான கடமைகளில் ஒன்று... விவசாயிகளுக்கு ஆதரவாக நின்று பேசுவதுதான். சொல்லப்போனால், பசுமை விகடன் என்கிற பத்திரிகை கருவான காலத்திலிருந்தே விகடனின் பிற இதழ்களில் விவசாயம் சார்ந்த கட்டுரைகள் வெளியிடப்பட்டன. அதில் மிக முக்கியமாக ஜூனியர் விகடனில் விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதிக்கக்கூடிய விஷயங்களைத்தான் விரிவாக எழுதினோம். பசுமை விகடன் தொடங்கப்பட்டதும், கோவணாண்டி என்கிற பெயரில் வாஜ்பாய், மன்மோகன் சிங், ப.சிதம்பரம், ஜெயலலிதா, கருணாநிதி என்று ஆட்சிப் பொறுப்பிலிருந்த அத்தனை பேரையும் நோக்கி சாட்டை வீசியிருக்கிறோம். இந்தக் கோவணாண்டியை எப்போதுமே கொண்டாடிக்கொண்டிருக்கிறது தமிழ்கூறும் உழவர் உலகம்.
அதுமட்டுமா... தூரன் நம்பி அவர்கள் எழுதிய பொருளாதாரம் சார்ந்த கட்டுரைகள் எத்தனை எத்தனை தெரியுமா? அதற்கு முன்னதாக விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் இருக்கும் பிரச்னைகளைப் பற்றி அவ்வளவாகத் தமிழ் மீடியாக்கள் தொட்டதே இல்லை. தேடித் தேடிக் கண்டறிந்து அத்தனை பிரச்னைகளையும் பொதுவெளியில் பகிர்ந்தது பசுமை விகடன் மட்டுமே! அனைத்தையும் தொகுத்து புத்தகமாகக்கூட வெளியிட்டிருக்கிறோம்.
இப்போதும்கூட மோடியின் மூன்று வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு வருமானம் என்கிற பம்மாத்துகள், விவசாயிகளின் டெல்லி போராட்டம் என்று தொடர்ந்து கட்டுரைகளையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறோம்.
நேரடி நடவடிக்கை என்கிற பெயரில் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, விவசாயிகளின் பல பிரச்னைகளுக்குத் தீர்வு தேடித்தந்துள்ளோம். உடைந்துபோன மதகு சீரமைக்கப்பட்டுள்ளது; காணமால்போன வாய்க்கால்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன; நேரடி நெல் கொள்முதல் நிலைய கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க வைக்கப்பட்டுள்ளது; அரசாங்கம் கடன் தள்ளுபடி அறிவித்தநிலையில், விவசாயிகளால் அடகு வைக்கப்பட்ட நகைகளைத் திருப்பித் தராமல் ஏமாற்ற நினைத்த வங்கிகளிடம் இருந்து நகைகள் மீட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி ஆட்சியில் இயற்கை விவசாயத்துக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட கறுப்புச்சட்டம் வாபஸ் பெறப்படுவதற்கு முக்கிய காரணமாக பசுமை விகடன் நின்றிருக்கிறது... இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பிரச்னைகளுக்கு எதிராக பசுமை விகடன் தொடுத்துக் கொண்டிருக்கும் போர்களை.
ஒரு பக்கம் பிரச்னைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டே... மறுபக்கம் தீர்வுகளைத் தேடும் முயற்சியாகத்தான் மகசூல் கட்டுரைகள் உள்ளிட்ட அனைத்தும் வெளியிடப்படுகின்றன. குறைந்தபட்சம் நம்மால் முடிந்த தீர்வுகளைக் காண வேண்டும் என்கிற வகையில், தற்சார்பு விவசாயம் என்பதை முழுமையாக முன்னெடுத்துச் செல்கிறது பசுமை விகடன். அந்த வகையில், ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகள், பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் கட்டுரைகள், உலக அளவிலான வேளாண் ஆராய்ச்சி நிலையங்களின் கட்டுரைகள் இவற்றையெல்லாம் பக்கம் பக்கமாகப் போட்டு பத்திரிகையை நிரப்பாமல், நேரடியாக விவசாயிகளின் அனுபவங்களைப் பகிர்வது மட்டுமே முழுமையாகக் கைகொடுக்கும் என்பதை உணர்ந்து முதல் இதழ் தொடங்கி, இன்று வரையிலும் விடாமல் அதைப் பின்பற்றிக்கொண்டிருக்கிறது பசுமை விகடன். சிறு-குறு விவசாயிகள் தொடங்கி, பெரு விவசாயிகள் வரை தாங்களாகவே வெற்றிக்கொடி நாட்டிக் கொண்டிருக்கும் பலரையும் பிற விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் இந்த யுக்தி, மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறது.
அதாவது, ஒரு விவசாயி தன்னுடைய அனுபவத்தின் மூலமாகப் பெற்ற பல்வேறு தொழில்நுணுக்கங்கள் மற்றும் தொழில்நுட்ப நுணுக்கங்களையெல்லாம் பசுமை விகடனில் பகிர்கிறார். சம்பந்தப்பட்ட விவசாயியின் தொடர்பு எண்களும் அதிலேயே கொடுக்கப்படுகின்றன. அது லட்சக்கணக்கான விவசாயிகளுக்குச் சென்று சேர்கிறது. தேவைப்பட்டால், அந்த விவசாயியிடமே நேரடியாகப் பேசி சந்தேகங்களைக் களைந்து, தாங்களும் விவசாயத்தில் வெற்றிபெறுகிறார்கள். இது ஒரு சங்கிலித் தொடர் முயற்சியாகக் கடந்த 14 ஆண்டுகளாகத் தொடர்கிறது. இந்த வகையில் விவசாய அறிவையும் தெளிவையும் பெற்று, விவசாயத்தில் வெற்றி பெற்றிருக்கும் பலரும் தங்களுடைய அனுபவங்களை எடுத்து வைக்கிறார்கள். அவையும்கூட பசுமை விகடனில் இடம்பெறுகிறது. அதை இன்னும் பல லட்சம் பேர் படித்துப் பயன்பெறுகிறார்கள்.
இதற்காகக் கருத்தரங்கங்கள், பயிற்சிக் கூட்டங்கள், நேரடி பயிற்சிகள், 24 மணி நேரமும் இயங்கும் பசுமை ஒலி எனும் பாட்காஸ்ட் என்று பல்வேறு ஏற்பாடுகளையும் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறோம். ஏன், இந்தக் கொடூர கொரோனா காலச்சூழலிலும் வயல்வெளிகளிலிருந்து நேரடி ஒளிபரப்பு மூலமாகவும் பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்தையும் செய்துவருகிறோம்.
தற்சார்பு எனும்போது, இடுபொருள் செலவு என்பதை முடிந்த அளவுக்குக் குறைப்பதுதான் மிகமுக்கியமானதாக இருக்கிறது. அந்த வகையில், ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளை ஒழித்தாலே பெருமளவு செலவு குறைந்துவிடும். பெரும்பாலான விவசாயிகளைக் கடன் சுமையில் ஆழ்த்துவதே இத்தகைய செலவுகள்தான். பொருளாதார புலியான ஜெயரஞ்சனுக்கும் இது தெரியாமல் இருக்காது.
அந்த வகையில், இச்செலவுகளை முடிந்த அளவுக்குக் குறைக்கக்கூடிய தொழில்நுட்பங்களை எடுத்து வைக்கும் வகையில்தான் `இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார், `ஜீரோ பட்ஜெட்' பிதாமகன் சுபாஷ் பாலேக்கர் போன்ற வேளாண் அறிஞர்களை தூக்கிச் சுமக்கிறது பசுமை விகடன். இவர்களுடைய நுட்பங்களைப் பின்பற்றி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தற்போது பயன்பெற்று வருகிறார்கள்.
நிச்சயமாக விவசாயத்தில் அனைவருமே வெற்றிக்கொடி நாட்டவில்லைதான். விவசாயம்தான் என்றில்லை, எந்தத் தொழிலாக இருந்தாலும் எல்லோருமே வெற்றிக்கொடி நாட்டிவிட முடியாது. சிலர் வாய்ப்புகள் கிடைத்ததால் வெற்றிபெறுகிறார்கள்; சிலர் வாய்ப்புகள் கிடைக்காமலே முடங்கிக் கிடக்கிறார்கள்; சிலர் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தெரியாமல் இருக்கிறார்கள்; சிலர் தாங்களாகவே வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டு மேலேறி வருகிறார்கள். அனைத்துவிதமான துறைகளுக்கும் இது பொருந்தும். அந்த வகையில், அனைத்து விவசாயிகளும் பயன்பெற்று மேலே வர வேண்டும் என்கிற வரிசையில்தான் வெற்றிக்கொடி நாட்டிவரும் விவசாயிகளைப் பற்றியும் எழுதுகிறோம். அதற்காக இதைப் பற்றி மட்டுமே எழுதுவதா... வெளிநாட்டிலிருந்து வந்து விவசாயம் செய்கிறான்.. அவனைப் பற்றி பசுமை விகடனில் எழுதுறான் என்று போகிற போக்கில் எச்சில் தெறிக்கவிடுவது, மூத்த பொருளாதார புலியான ஜெயரஞ்சனுக்கு அழகல்ல.
இவற்றையெல்லாம் எடுத்துச் சொல்லி, அவருடைய விளக்கத்தைக் கேட்பதற்காகத்தான் பல தடவை அவரைத் தொடர்புகொண்டோம். இறுதியாக, மேற்கொண்ட கடிதத்தை 02 ஏப்ரல், 2021 அன்று மெயில், வாட்ஸ் அப், ஃபேஸ் புக் மூலம் அவருக்கு அனுப்பி வைத்தோம். இதுவரை எந்தப் பதிலும் இல்லை. `அரசியல் பொருளாதார புலி' என்று தன்னைச் சுற்றி ஒரு பிம்பத்தை உருவாக்கிக்கொண்டு மீடியாக்களில் வலம் வரும் ஜெயரஞ்சன், எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல், பசுமை விகடன் மீது குற்றம் சுமத்தியிருக்கிறார். பதில் கேட்டால் வாய்திறக்க மறுக்கிறார்.
அரசாங்கத்துக்கு எதிராகவும், அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் பேசுகிறார். அவற்றில் நியாயம்கூட இருக்கலாம். அல்லது சுயலாபம்கூட இருக்கலாம். ஆனால், ஒரு பத்திரிகையின் மீது போகிற போக்கில் புழுதிவாரித் தூற்றி, கைத்தட்டல்களை அள்ளுவது, என்ன வகை மனநிலையோ?
உண்மையிலேயே பசுமை விகடன் மீது அவர் வைக்கும் விமர்சனங்களில் நூறு சதவிகிதம் உண்மை இருக்குமாயின், சக பத்திரிகையாளராக, எழுத்தாளராக, விமர்சகராக நேரடியாக எங்களிடமே கூட பேசியிருக்கலாம். தவறு இருக்கும்பட்சத்தில் திருத்திக்கொண்டிருப்போம். அல்லது உரிய விளக்கத்தைக் கொடுத்திருப்போம். ஒருவேளை அப்படியெல்லாம் பேசினால், பத்திரிகையில் வெளியிடாமல் விட்டுவிடுவார்கள் என்று நினைத்தே பொதுவெளியில் பேசியிருக்கிறார் என்றுகூட எடுத்துக்கொள்வோம். இதற்கு பிறகும் விளக்கம் சொல்ல நாங்கள் தயார் எனும்போது, கண்டுகொள்ளாமலிருப்பதை... 'இழவு வீடாக இருந்தால் நான்தான் பிணமாக இருக்க வேண்டும்... கல்யாண வீடாக இருந்தால் நான்தான் மாப்பிள்ளையாக இருக்க வேண்டும்' என 'எப்போதும் ஊடக வெளிச்சத்திலேயே வாழ நினைக்கும் கேவலமான தந்திரம் என்றே சொல்லத் தோன்றுகிறது.
திருவாளர் ஜெயரஞ்சன், இப்போதும்கூட தான் கொடுப்பதாகச் சொல்லியிருக்கும் கட்டுரையை Terms of trade (TOT) கொடுத்தால், வெளியிட பசுமை விகடன் தயாராகவே உள்ளது. கூடவே, பசுமை விகடன் பற்றிய தாறுமாறாக மனம்போன போக்கில் தான் எடுத்து வைத்த விமர்சனத்துக்கும் உரிய ஆதாரங்களையும் விளக்கங்களையும் சேர்த்தே அனுப்பி வைக்க வேண்டும் என்பது எங்களின் தாழ்மையான வேண்டுகோள்.
காத்திருக்கிறோம்!
ஆசிரியர்,
பசுமை விகடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக