வியாழன், 29 ஏப்ரல், 2021

மே.வங்கம் மம்தா கட்சி 158, பாஜக 115, காங். அணி 19, இதர 2 - மூன்றாவது முறையாகவும் மம்தா winning

Mamata Banerjee forms 11-member team ahead of her visit to Germany, Italy -  India News

  Jeyalakshmi - tamil.oneindia.com : கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டசபைத் தேர்தலில் திதீ மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தீயாய் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக அரியணையில் அமரப்போகிறார்
டைம்ஸ் நவ் சி வோட்டர் நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 294 சட்டசபைத் தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ்-கம்யூனிஸ்டு கூட்டணி ஆகியவற்றுக்கு இடையே மும்முனை போட்டி உள்ளது
அந்த மாநிலத்தில் தொடர்ச்சியாக இரண்டு முறை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றியை பெற கடும் முயற்சி செய்துள்ளார் மதா பானர்ஜி. முதல்முறையாக ஆட்சியை பிடித்து அரியணை ஏற வேண்டும் என்று பாஜக தீவிரமாக களம் இறங்கி உள்ளது. அதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் மீண்டும் அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்று பரம வைரியான காங்கிரஸ் கட்சியுடன் கரம் கோர்த்துள்ளது.



தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் மேற்கு வங்க மாநிலத்தில் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் இன்று வெளியாகியுள்ளன.


மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 3வது முறையாக மம்தா பானர்ஜி ஆட்சி அமைப்பார் என்று டைம்ஸ் நவ் சி வோட்டர் நடத்திய எக்ஸிட் போல் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ளன. டைம்ஸ் நவ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 158 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளது.
பாஜகவிற்கு 115 இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக டைம்ஸ் நவ் சி எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு மொத்தம் 19 இடங்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளதாக எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன.

மேற்கு வங்க மாநிலத்தில் இன்றுடன் கடைசி கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. மே 2ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டு  அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் பலிக்குமா? அல்லது ஆட்சியும் காட்சியும் மாறுமா பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக