சனி, 6 மார்ச், 2021

Saravana Kanth IAS :பாசிச மதவெறியிலிருந்து, சாதிவெறியர்களிடமிருந்து எதிர்காலத்தை மீட்போம்! வாருங்கள், கரம் கோருங்கள்

Another IAS officer quits service – The Sen Times
Saravana Kanth IAS
Saravana Kanth IAS :  சரவண காந்த் ஆகிய நான், இந்தத் *தமிழ்நாடு மற்ற இந்திய மாநிலங்களை ஒப்பிடுகையில் தனித்துவம் வாய்ந்த ஒன்று* என புரிந்திருக்கிறேன், *இடஒதுக்கீடு தொடங்கி மாநில சுயாட்சி வரை* குறிப்பிட்ட அளவு முன்னோக்கி நகர்ந்திருக்கிறோம் என நம்புகிறேன், *இந்த வளர்ச்சி காமராசர், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா அவர்களுக்குப் பெரும் பங்கிருக்கிறது* என்பதை என்னால் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு புரிந்துகொள்ளமுடிகிறது,
இந்த *வளர்ச்சியும், மாநில சுயாட்சி உரிமையும், இடஒதுக்கீடும் தொடரவேண்டுமென விரும்புகிறேன்.*
கடந்த ஐந்தாண்டுகளில் பிஜேபியும் அதிமுகவும் இன்னபிற கால் கழுவல் கட்சிகளையும், அவர்கள் உருவாக்கிய *பிம்ப காட்சிகளையும் பார்த்தே வருகிறேன்.*
*இந்தத் தேர்தல் எனக்கு கட்சி சார்ந்த தேர்தலே அல்ல. சித்தாந்த தேர்தல்.*
சாதி, மதம் என சொல்லி மக்களைப் பிரித்து மாநில வளர்ச்சியைப் பிரித்தாழும் *பார்ப்பனீய சூழ்ச்சியா?*
அல்லது
இதுவரை என்னை ஓரளவு நகர்த்திய *திராவிட ( தமிழக )* *அரசியலா?*
*நான் திராவிட அரசியலைத் தேர்ந்தெடுக்கிறேன்.*
நான் கொண்டாடும் மானுடம் அவர்களால் காக்கப்படும் என நம்புகிறேன்.
ஊழலா?, நேர்மையா? என்றால் நான் நேர்மையைத் தேர்ந்தெடுக்கிறேன்.
*ஊழலா?, பாசிசமா?* *என்றால் நான் ஊழலைத் தேர்ந்தெடுக்கிறேன்.*
ஏனெனில் ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். ஜெயலலிதா, சசிகலா உதாரணம். ஆனால் *பாசிசவாதிகள் முன்பு நீதிமன்றமே மண்டியிட்டு நிற்கிறது.* ஊழல் தன் பங்கைக் கொடுத்துவிட்டு மெளனமாய் பிச்சை எடுத்து நிற்கிறது.
திமுக ஊழல் கட்சி என்ற சிலரின் கதறல்களையும், அதே கட்சிகள் *பிஜேபி, அதிமுக ஊழல் முன் மண்டியிட்டு நிற்பதைப் பார்க்கிறேன்.*
இந்தத் தேர்தலில் தமிழகத்தின் *எதிர்கால நலன் கருதியும், எதிர்கால சந்ததியினர் நிலை கருதியும்*
*என் ஆதரவு திமுக என்பதைச் சொல்கிறேன்.*
அதைவிட முக்கியமாய், அதிகமும் பிஜேபியின் அட்டுழியங்களை எழுதவேண்டும், எதிர்க்க வேண்டும் என்பதையும், அதையே நான் நம்பும் அறம் எனவும் நம்புகிறேன். மூன்றாவது அணியெல்லாம் யாருடைய ஏவல் என்பதை ஓரளவு அரசியல் புரிந்தவர்களுக்கே புரியும். ஆகையால் அவர்களைப் புறந்தள்ளுகிறேன்.
என்னிடம் இருப்பது கட்சிசார் சிந்தனையல்ல, சித்தாந்தம் சார்ந்த சிந்தனை. அது எப்போதும் மக்களையும் அவர்தம் எதிர்காலத்தையும் அவர் தம் மீட்பையும் மட்டுமே சிந்திக்கும்.
என் எழுத்துக்கள் எப்போதும் அப்படியே என நம்புகிறேன்.
எனக்கு தெரியும், என் இந்த நிலை வெளிப்படையாக என்னை ஒரு கட்சி சார்ந்தவனாய் நிறுத்துமென.
ஆனாலும் தவறில்லை. இது இப்போதைக்குத் தேவை. என் வாழ்க்கை எவருக்கும் பதில் அல்ல. என் வாழ்க்கை எப்போதும் வாழ்தல். மானுடம் பயனுற வாழ்தல்.
*இந்தத் தேர்தலை இப்படியே சந்திக்க இருக்கிறேன். இது என் அறமென நம்புகிறேன்.*
வரும் *ஒரு மாதம் என் கவனம் முழு அரசியல் நோக்கியே இருக்கும்.* பிடிக்காதவர்கள் விலகி கொள்ளுங்கள். அது உங்கள் உரிமை.
பிடித்தவர்கள் வாருங்கள், கரம் கோருங்கள். *_பாசிச மதவெறியிலிருந்து, சாதிவெறியர்களிடமிருந்து எதிர்காலத்தை மீட்போம்._*
Saravana Kanth IAS

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக