சனி, 6 மார்ச், 2021

காங்கிரஸில் இருக்கும் ஆர்எஸ்எஸ்காரர்கள் காலம் நேரம் பார்த்து காலை வருவார்கள்! .... இன்று வட இந்தியாவில் அதுதான் ...

ஆலஞ்சியார் : · காங்கிரஸ்..INC பழைய நினைப்பில் பேசுகிறார்கள்.. இந்தியா முழுவதுமே 44 ல் ஒதுங்கியவர்கள் தமிழகத்தில் எட்டு இடங்களில் வென்றதென்றால் அது திமுக எனும் சக்தியின் உந்துதலே காரணம் .. இன்றைய இந்தநிலை வர என்ன காரணம் என ராகுல் கூட அறிவார் ..காங்கிரஸில் இருந்த ஆர்எஸ்எஸ்காரர்கள் நேரம் பார்த்து காலைவார இன்று வட இந்தியாவில் மெல்ல கரைய தொடங்கியிருக்கிறது ..தென்மாநிலங்களிலும் காங்கிரஸ் தேய்பிறை போலதான் .. ஜமீன் நினைப்பிலிருந்து மாறாதவரை காங்கிரஸ் இனி தென் மாநிலங்களிலும் தேடபடுகிற நிலைதான் வரும் .. நிலக்கிழார்களையும் அரசபரம்பரை என்பவர்களை சட்டை கசங்காமல் கதரோடு அலைபவர்களையும் நம்பி பலனில்லை .. மக்களிடம் தலைவர்களை கண்டெத்தாதவரை ..ஜோதிமணிகள் கண்ணுக்குதெரியாதவரை காங்கிரஸ் இறங்குமுகம் தான்..
..
2011 ஐ மறக்க முடியுமா.. கீழே பேச்சுவார்த்தை மேலே ரெய்டு என 2ஜியை காட்டி அதிக தொகுதி பெற்றதில் ஒன்றை தவிர அத்தனையும் போனதே.. கடந்த தேர்தலிலும் 41 ல் எட்டைதானே வெல்ல முடிந்தது .. பக்கத்து மாநிலங்களில் விலைபோகும் காங்கிரஸ்காரர்கள் ..வலுவிழந்து நிற்கும்போது திமுக எத்தனை தரமுடியுமென யோசிக்கதான் செய்யும் .. அடிமட்ட தொண்டனை இழந்துநிற்கும் காங்கிரஸ் "பேரியக்கம்" என்ற நினைப்பை போட்டுவிட்டு வருவதுதான் சரி.. வெல்லகூடிய தொகுதிகளை கேட்டு அதில் வென்று காட்ட முயற்சிக்கலாம் .. எண்ணிக்கை தான் என்றால் காங்கிரஸின் கடைசி அத்தியாயம் இதுவாக இருக்கலாம் ..எந்தவொரு பொது பிரச்சனையிலும் மக்களை திரட்டி போராடாமல் வெகுமக்களை கவர்ந்திழுத்து அரசியல் செய்யாமல் மன்னர் மனப்பான்மையில் இருந்தால் எதுவும் தேறாது ..
..
110 தொகுதிகளில் செல்வாக்கு இருப்பதாக சொல்வதை அவரது குடும்பத்தாரே கேட்டு சிரிப்பார்கள்
100 தொகுதி செல்வாக்கெனில் கூட்டணிக்கு தலைமையேற்றிருக்கலாம்.. வெளியேற திட்டம் தீட்டிவிட்டு கண்ணீர் விடுவதினால் பலனில்லை ..ராகுல் சொன்னதை நினைவுபடுத்துவோம் ..இது ஸ்டாலினுக்கான தேர்தல் ..திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக அதிக இடங்களில் திமுக போட்டியிட வேண்டும் என்பதை ஏற்கனவே பலமுறை திமுக தலைவர்கள் சொல்லியிருக்கிறார்கள் .. அதற்காக காங்கிரஸை குறைத்து மதிப்பிடவில்லை மாறாக இயல்பை சொல்லவேண்டியது காலத்தின் கட்டாயம் ..
வெற்றிகூட்டணியில் பயணம் .. நல்ல குதிரையின் மீதேறி சவாரி செய்தால் பயணம் எளிதாகும் .. மலைக்கும் மடுவிற்கும் வித்தியாசம் தெரியும் மலை சல்லிசல்லியாக உடைக்கபட்டு மடுவாகி போனதை அறியாதவரா அழகிரி..
..
நாளையோடு தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை முடிகிறது என திமுக தலைவர் அறிவித்திருப்பதின் அர்த்தம் பொதிந்தது .. காத்திருக்க நாளில்லை.. வேட்பாளர் அறிவிப்பு களம் மக்களை சந்திப்பு என நிறைய பணிகள் காத்திருக்கிறது .. காலம் கடந்தபின் "கல்யாண மாப்பிள்ளை"கனவை காண்பது வீண்..
பண்ணையார் ஆதிக்கமெல்லாம் எடுபடாதென்ற யதார்த்தம் உணர வேண்டும்.. வீண்பிடிவாதம் தவிர்த்தால் நன்று ..இல்லையெனில்..
காத்துவரட்டும் ..
..
ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக