புதன், 3 மார்ச், 2021

NEET PG - க்கு விண்ணப்பிப்பதையே ஒரு பரீட்சைபோல ஆக்கிவைத்துள்ளது பிஜேபி அரசு .

Murugeswari Madurai : NEET PG - க்கு விண்ணப்பிப்பதையே ஒரு பரீட்சைபோல ஆக்கிவைத்துள்ளது பிஜேபி அரசு .
எல்லாமே ஆன்லைன் . நீண்ட க்யூ .
ஓரிரு பிரவுசிங் சென்டர்களிலேயே விண்ணப்பிக்கத்தெரிந்தவர்கள் இருப்பார்கள் . ரியல்டைம் ஃபோட்டொ வேறு கேட்கப்பட்டுள்ளது .
தேர்வுக்கட்டணமும் இம்முறை மிக அதிகம் .
பிரவுசிங் செண்ட்டரில் உள்ள டெக்னிகல் guy அவனுக்குவேண்டியவர்களுக்கெல்லாம் விண்ணப்பித்துமுடித்துவிட்டு இறுதியாகத்தான் நம்மிடம் வருவான் .
OTP வரவில்லையென்று நமது ஈமெயில் பாஸ் வேர்ட் எல்லாம்கேட்டு marrow அக்கௌன்ட் திருடிவிற்பான் .
இதெல்லாம்நடக்கிறது .
கொடுமையான நீட் .
எவன்சொன்னாலும் சொல்லாவிட்டாலும் பிஜேபியின் அலப்பறைகளை நன்கறிந்த காரணத்தால் ,
தமிழ்நாட்டில் தேர்வுமையம் முதல்நாளிலேயே தீர்ந்துவிடுமென்ற எனது ஊகத்தின் அடிப்படையில் , லீவு போட்டுவிட்டு photo studio சென்று் புகைப்படம் எடுத்துக்கொண்டு பதினொன்றரைக்கே பிரவுசிங் சென்டருக்குச்சென்றால் ...
மூணுமணிக்குத்தான் site ஓபன் ஆகும் என்றான் சைத்தான் .
காத்திருந்தேன் .
சரியாக மூன்றுமணிக்கு மூன்றுநான்கு ஆண்மருத்துவர்கள் வந்தனர் .
என்னைக்கிஞ்சித்தும் கண்டுகொள்ளாத அந்த ஆள் , அவர்களுக்கெல்லாம் முடித்துவிட்டு இறுதியாகத்தான் எனக்கு விண்ணப்பித்தான் .
மணி மாலை ஆறுமணி .
இந்நேரத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துமுடித்திருப்பார்கள் .
அந்த ஆளை மானசீகமாக சபித்துவிட்டு , நீட் தேர்வைக்கொண்டுவந்தகாரண
கர்த்தாக்களையும் சபித்துவிட்டு , ஆன்லைன் submission முடித்துவிட்டு அங்கிருந்துகிளம்பி வீட்டுக்குவந்துசேர மணி ஏழு .
மன உளைச்சல் ஏகத்துக்கும் .
இம்முறைமுடிவெடுத்தேன் தீர்க்கமாக .
மதுரையைத்தவிர வேறு ஊரில் தேர்வுமையம் எனக்குக்கொடுக்கப்பட்டால் , தேர்வுக்குச்செல்வதில்லை .
இவ்வருடம் தேர்வெழுதி சீட் கிடைக்காவிட்டால் , மேற்படிப்பெனும் ஆசைக்கு முழு முழுக்கு .
தகுதியில்லாதவர்களுக்குத்தான் சீட் கிடைக்குமென்பதில் சந்தேகமில்லை .
ஞாபகசக்தியைப்பற்றி சொல்லவில்லை .
மனித
நேயமேயில்லாதவர்களுக்குத்தான் உடனடியாக நீட்டில் தீர்வுகிடைத்து சீட்டும்கிடைக்கிறது பெரும்பாலும் .
நீட் ஒழிக்கப்படமுடியாதது சாதி போலவே .
ஆனால் , விண்ணப்பிக்கும் முறையை எளிதாக்கலாம் .
விருப்பமுள்ளவர்கள் எழுத்துப்படிவத்தின் மூலமாக விண்ணப்பிக்கவும் , விண்ணப்பிக்கும்முறையை மாற்றியமைக்கவும் , முடிந்தால் செண்டரில் நடைபெறும் கெடுபிடிகளை முற்றிலுமாக நிறுத்தி , நிம்மதியாகத்தேர்வெழுத வழிவகைசெய்யவேண்டும் .
முடிந்தால் கம்பியூட்டர்களைக்கடாசிவிட்டு காகிதத்தால் கேள்வித்தாள்கள் கொடுக்கப்படவேண்டும் .
எக்காரணத்தைக்கொண்டும் தாமரை மலரவே கூடாது .
குளங்களில் தவிர .
Marrow அக்கௌன்ட் மீட்டுவிட்டேன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக