திங்கள், 22 மார்ச், 2021

MOCK poll ( Sample poll) மாதிரி வாக்களிப்பு பரீட்சித்து பார்க்கப்பட வேண்டும்! ... பூத் ஏஜெண்டுகள் கவனத்திற்கு.. வாக்கு எண்ணிக்கையில் நூதன மோசடி - அரசியல் கட்சிகளே உஷார்!

 Sivakumar Nagarajan  : மாதிரி வாக்களிப்பு  வாக்களிப்பு பரீட்சித்து பார்க்கப்பட வேண்டும்! 
திமுக கூட்டணி பூத் ஏஜெண்டுகள் கவனத்திற்கு..
MOCK poll ( Sample poll)
விதிமுறைகள்
1) தேர்தல் நாள் அன்று தேர்தல் நேரத்திற்கு 90 நிமிடங்கள் முன்பாக Mock poll நடத்தப்படவேண்டும் .
2) இரண்டு அல்லது அதற்கு மேல் ஏஜெண்டுகள் முன்னிலையில்தான் நடத்தப்படவேண்டும் ..
எனவே திமுக ஏஜெண்டுகள் முதல் ஆளாக பூத்துக்கு போயிடவேண்டும் .
3) குறைந்தது 50 ஓட்டுப் போடனும்.
4) எல்லா சின்னத்திலும் 2,3,4 ஓட்டுப் போடுங்கள்.
5) ஏதாவது ஒரு சின்னத்தில் மட்டும் அதிகமான ஓட்டுப் போடுங்கள்.
6) போடும் ஓட்டுகளை குறித்துக் கொள்ளுங்கள்.
7) பிறகு முடிவுகளை பாருங்கள்
சரிப் பார்த்த பின்னர் VVPAT ல் Ballot slip பேப்பரை வெளியில் எடுத்து விடனும்.
8) EVM ல் Clear பட்டன் மூலம் Mock poll அழிப்பை உறுதி செய்யனும்.
9) Mock poll result தவறாக வந்தால் உடனே ஆட்சேபிக்கவும்.
கவனம் தேவை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக