திங்கள், 22 மார்ச், 2021

இலவசங்கள் / சமூக நலத்திட்டங்கள் தமிழ்நாட்டில் சாதித்தது என்ன?

 

செல்லபுரம் வள்ளியம்மை : சமூகநல திட்டங்கள் எல்லாவற்றிலுமே ஒரு சமூகநல பார்வை இருக்கிறது.
இதில் நிறைய புரிதால் பிரச்சனை இருக்கிறது
.உதாரணத்திற்கு தமிழ்நாட்டின் இன்றைய வரவு செலவுத்திட்டம் என்று பார்த்தால் 2 இலட்சம் கோடி ரூபாய்கள் (செலவுகள்).
ஆனால் கலைஞர் இலவச தொலைக்காட்சி பெட்டியின் செலவு வெறும் 3300 கோடி!
இலவச லாப்டாப் செலவு வெறும் 2 ஆயிரம் கோடி.
ஆனால் இங்கு ஜி எஸ் டி சேல்ஸ் டாக்ஸ் வாட்ஸ் மூலமா வருகின்ற வருமானம் ஒரு லட்சம் கோடி.
இந்த ஒரு லட்சம் கோடி வருவாயில் ஐம்பது சதவீதத்திற்கு மேல் அடித்தட்டு மக்களின் பங்களிப்பாகும்
அதாவது அவர்களின் பங்களிப்பு ஐம்பதாயிரம் கோடி.
அந்த பணத்தை எப்படி அவர்களுக்கு திருப்பி கொடுக்கிறீர்கள்?
நடுத்தர வர்க்கம் உயர் நடுத்தரவர்க்கம் அதிகமாக பயன்படுத்தும் ரோடு மருத்துவமனை எல்லாவற்றிக்கும் இந்த ஒரு லட்சம் கோடியில் இருந்துதான் செலவு செய்கிறோம்.
ஆனால் ஏழைகள் காரும் ஸ்கூட்டரும் வாங்கிறதில்லை ரோடும் பயன்படுத்துவதில்லை .
ஆனால் எல்லா நன்மைகளும் இந்த ஒரு லட்சம் கோடியில் இருந்துதான் பணக்கார நடுத்தர வர்க்கம் பயன்படுத்துகிறது.
ஆனால் ஏழைகளுக்கு இதெல்லாம் போய் சேர்வதில்லை.
இந்த சமூக நலத்திட்டங்கள் இந்த சமூகத்தை மிக பெரிய அளவில் சமப்படுத்துகிறது
இந்த புரிதல் எமக்கு இல்லவே இல்லை.
இருபது வருடங்களுக்கு முன்னால் டிவி வந்தது
அப்போது தூரதர்ஷனில் ஒலியும் ஒளியும் என்று ஒரு புரோகிராம் வந்தது .
ஒரு தெருவில் ஒரே ஒரு வீட்டில் மட்டும்தான் டிவி இருக்கும்.
குடிசை வீட்ல இருக்கிறவங்க எல்லாம் பார்க்க முடியாது
அவர்கள் எல்லாம் அந்த டிவி உள்ள வீட்டின் ஒரு ஜன்னல் பின்னால் நின்றுதான் பார்க்கவேண்டும் அந்த வீட்டிற்கு உள்ளே விடமாட்டார்கள்.
அந்த கதவின் ஓரம் நின்று பார்த்துக்கொண்டிருப்பார்கள்
உள்ளே இருப்பவர்கள் உள்ளே உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருப்பார்கள்
இந்த அனுபவம் இருந்தால்தான் டிவி யின் முக்கியத்துவம் என்ன என்று உங்களுக்கு புரியும்.
இந்த அனுபவம் ஏற்படாதவரைக்கும் இது பற்றிய ஆழமான புரிதல் உங்களுக்கு குறைவாகவே இருக்கும்.
தமிழ்நாட்டில் டிவி கொடுக்கும் போது ஒரு விடயம் நடந்தது .
ஒரு சமூகத்தில் டிவி பெனிடரேஷன் இண்டெக்ஸ் என்ற ஒன்று உள்ளது
(தொலைக்காட்சியின் தாக்கம் உள்ளோர்).
உலகத்திலேயே மொத்த டிவி பார்ப்போரின் வீதம் தமிழ்நாட்டில்தான் மிக உயர்ந்த அளவில் 97.05 என்று ஆகியது.
இது மிக மிக முக்கியமான ஒரு விடயம் . ஏனென்றால் இன்று அரசியல் கருத்துருவாக்கத்தில் மிகவும் துடிப்பாக இருக்கும் மாநிலம் தமிழ்நாடுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக