செவ்வாய், 16 மார்ச், 2021

வேட்பாளர் தேர்வு: திமுக உதவியை நாடும் காங்கிரஸ்

வேட்பாளர் தேர்வு: திமுக உதவியை நாடும் காங்கிரஸ்

 minnambalam :வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 25 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலில் இதுவரை 21 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மீதமிருக்கும் விளவங்கோடு, குளச்சல், வேளச்சேரி, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட வேண்டியுள்ளது.   இதில் குமரி மாவட்டத்தில் இருக்கும் இரு தொகுதிகளிலும் முறையே விஜயதாரணி, பிரின்ஸ் ஆகியோர் தொடர்ந்து 2 முறை சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி வகிப்பதால் அவர்களைத் தவிர வேறு ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்டது. குறிப்பாக விஜயதாரணிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று சத்தியமூர்த்தி பவனில் போராட்டங்களும் நடந்தன..

இந்த நிலையில் வேளச்சேரி, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேடுவதில் காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இத் தொகுதியை குறிவைத்து முக்கியஸ்தர்கள் பலர் காங்கிரஸ் கட்சி தலைமைக்கு வரும் நிலையில்... குழப்பத்தில் இருக்கும் காங்கிரஸ் இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் உதவியை நாடியுள்ளது.

மேற்குறிப்பிட்ட இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளராக யாரை நியமிக்கலாம் என்று திமுக தரப்பில் தெரிவிக்குமாறு திமுக தலைமையிடம் தமிழக காங்கிரஸ் தலைமையில் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக