செவ்வாய், 16 மார்ச், 2021

தலைமன்னாரில் ரெயில் பள்ளி மாணவர் பேருந்து கோர விபத்து! 9 வயது மாணவன் உயிரிழப்பு - 25 பேர் படுகாயம்

ibctamil :தலைமன்னாரில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து புகையிரதத்துடன் மோதியதில் 9 வயதுடைய மாணவன் உயிரிழந்துள்ளதுடன், 25 பேர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை பேருந்து கடக்க முயன்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது

தலைமன்னார் புகையிரத கடவையில் ரயில் மற்றும் தனியார் பஸ் நேரடியாக மோதியதில் பலர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலைமன்னார் விபத்தில் ஒன்பது வயதான மாணவன் பலியாகியுள்ளார், சம்பவத்தில் 23 ​பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதேவேளை, தலைமன்னார் விபத்தை அடுத்து மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு நிலவுகிறது. குருதி கொடையாளிகள் குருதி வழங்கி உதவுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்டேன்லி டி மெல் அவசர கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
பஸ்ஸில் பயணித்த அதிகமானோர் மாணவர்கள் என கூறப்படுகின்றது..
பேருந்தில் சென்றவர்களில் 14 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மன்னார் பொது வைத்தியாசாலையிலிருந்து ஐந்து நோயாளர் காவுவண்டிகள் தலைமன்னார் நோக்கிப்பயணித்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக