வெள்ளி, 12 மார்ச், 2021

என்ன விளையாடுறீங்களா?.. நேரடியாக "அவருக்கே" போனை போட்ட ஸ்டாலின்.. ப்பா எவ்வளவு கோபம்.. பரபர சம்பவம்

Stalin defends Rahul for PM pitch: Need strong leadership - India News

Shyamsundar - tamil.oneindia.com  :சென்னை: கிட்டத்தட்ட விரக்தியின் உச்சத்திற்குக்கே சென்று.. என்ன செய்வது என்றே தெரியாமல் கடைசியில்தான் அந்த போன் உரையாடல் நடந்துள்ளது.
திமுக - காங்கிரஸ் இடையே நேற்று தொகுதிகளை ஒதுக்குவதில் குழப்பம் ஏற்பட்ட நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் முக்கியமான போன் கால் ஒன்றை செய்துள்ளார்!
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக 173 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. மீதமுள்ள தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகிறது.
மொத்தம் 187 தொகுதிகளில் திமுகவின் உதய சூரியன் சின்னம்தான் போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு அதிகபட்சமாக 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மற்ற கூட்டணி கட்சிகள் அனைத்திற்கும் 6 அல்லது 6க்கும் குறைவாகவே இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நேற்று திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை தேர்வு செய்வதற்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
இதில் மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை போட்டியிடும் தொகுதிகள் எளிதாக தேர்வு செய்யப்பட்டது. ஆனால் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகளை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்தது
அதிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிட வேண்டிய 25 தொகுதிகளை ஒதுக்குவதில் கடும் குழப்பம் ஏற்பட்டது. திமுகவின் முக்கிய உறுப்பினர்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளை காங்கிரஸ் கேட்டது. திமுக ஏற்கனவே உறுதியாக போட்டியிட போகிறோம் என்று டிக் அடித்து வைத்து இருந்த இடங்களை காங்கிரஸ் கேட்டது. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது.



நாங்கள் ஏற்கனவே 25 இடங்கள் என்று இறங்கி வந்துவிட்டோம்... இந்த முறை நீங்கள்தான் இறங்கி வர வேண்டும். 25 இடங்கள் கொடுக்கிறீர்கள்.. அதையாவது நாங்கள் விரும்பும் தொகுதிகளாக கொடுங்கள். நாங்கள் வலுவாக இருக்கும் தொகுதிகள் எல்லாமும் எங்களுக்கு கண்டிப்பாக வேண்டும் என்று காங்கிரஸ் உறுதியாக இருந்துள்ளது

ஆனால் காங்கிரஸ் கேட்ட இந்த இடங்களை திமுகவில் தவிர்க்கவே முடியாத சில முக்கிய புள்ளிகள் கேட்டு உள்ளனர். இதுதான் திமுக திணறியதற்கு காரணம். வேட்பு மனு தாக்கல் தொடங்க போகிறது. இப்போது போய் கறார் காட்டுவது சரியில்லை..என்ன விளையாடுறீங்களா என்று திமுக தரப்பு கொதிக்கும் அளவிற்கு சூழ்நிலை சென்றுள்ளது.
இதையடுத்தே நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் ஸ்டாலின் போனில் பேசி இருக்கிறார். புதுச்சேரி கூட்டணி குறித்து பேசுவதற்காக போன் போட்ட ஸ்டாலின்.. தமிழக அரசியல் குறித்தும் பேசி உள்ளார்.சுமார் 15 நிமிடங்கள் தொகுதிகள் தேர்வு குறித்தும்,, பங்கீடு குறித்தும், வெற்றிவாய்ப்பு வாக்கு வங்கி குறித்தும் ஸ்டாலின் பேசி உள்ளார்.
இதன் பின்புதான் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிகளை தேர்வு செய்வதில் சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது .இரண்டு தரப்பும் சில இடங்களை பரஸ்பரம் விட்டுக்கொடுக்க முடிவு செய்த பின் 25இடங்கள் உறுதி செய்யப்பட்டன. அதன்படி ஓமலூர், உதகை, காரைக்குடி, ஊத்தங்கரை, கள்ளக்குறிச்சி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருவாடானை, மயிலாடுதுறை,குளச்சல், விளவங்கோடு, மேலூர், சிவகாசி, பொன்னேரி, வேளச்சேரி, தென்காசி , ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கர், ஸ்ரீவைகுண்டம்,கோவை தெற்கு, ஈரோடு, கிள்ளியூர், அறந்தாங்கி, நாங்குநேரி, உடுமலைப்பேட்டை, விருத்தாசலம் ஆகிய 25 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/how-a-phone-call-from-mk-stalin-made-things-easy-for-dmk-congress-alliance/articlecontent-pf529355-414583.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக