வெள்ளி, 12 மார்ச், 2021

டிடிவிக்காக எடுத்த முடிவா? கோவில்பட்டியை விட்டுக்கொடுத்த திமுக.. .. இங்கு திமுகவை விட இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் பலம் வாய்ந்த

டார்கெட்

Shyamsundar -/tamil.oneindia.com :  சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தற்போது கோவில்பட்டி தொகுதி மிக முக்கியமான தொகுதியாக மாறியுள்ளது..
அதிலும் இந்த தொகுதியில் கடுமையான மும்முனை போட்டி நிலவ போகிறது!
தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்து வருகிறது..
இந்ந சட்டசபை தேர்தலில் தமிழகம் முழுக்க நிறைய ஸ்டார் தொகுதிகள் உள்ளன. பெரிய வேட்பாளர்கள் போட்டியிடும் ஸ்டார் தொகுதிகள் எப்போதும் தேர்தலில் கவனத்தை ஈர்க்கும்.
அப்படி ஒரு ஸ்டார் தொகுதியாகத்தான் கோவில்பட்டி தொகுதி உருவெடுத்து உள்ளது.
இங்கு திமுக - அதிமுக - அமமுக இடையே மிக கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த தொகுதிக்காக நேற்று திமுக எடுத்த முடிவு ஒன்றும் கவனத்தை ஈர்த்துள்ளது
கோவில்பட்டி தொகுதியில் கடந்த இரண்டு சட்டசபை தேர்தலிலும் அதிமுகவே வென்றது.
கடம்பூர் சி ராஜு இங்கிருந்து வெற்றிபெற்றுதான் அமைச்சர் ஆனார்.
அதிமுகவின் வலுவான இடங்களில் கடம்பூர் சி ராஜுவின் கோவில்பட்டி தொகுதியும் உள்ளது. இங்குதான் கடம்பூர் சி ராஜு மீண்டும் போட்டியிட்டு ஹாட்டிரிக் போட திட்டமிட்டுள்ளார்



ஆனால் இவர் இரண்டு முறை எம்எல்ஏ ஆகிவிட்டதால் கண்டிப்பாக மக்களிடம் எதிர்ப்பு அலை இருக்கும் என்று அமமுக நம்புகிறது. இவரை வீழ்த்திவிடலாம், ஜாதி வாக்குகளும் இவருக்கு எதிராக திரும்பும் என்று டிடிவி தினகரன் நம்புகிறார். இதனால் அமமுக சார்பாக டிடிவி தினகரன் இங்கு தைரியமாக களமிறங்குகிறார்.
ஆர்கே நகரில் வென்ற பின் தினகரன் அந்த தொகுதி பக்கமே செல்லவில்லை என்ற புகார் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது அங்கிருந்து ஜம்ப்பாகி கோவில்பட்டியில் லேண்டாகி உள்ளார் தினகரன். அதிமுகவை இங்குத்தான் எளிமையாக எதிர்கொள்ள முடியும் என்று நிர்வாகிகள் கொடுத்த நம்பிக்கை காரணமாக டிடிவி தினகரன் இங்கு தைரியமாக களமிறங்கி உள்ளார்.

திமுக இப்படி இருக்கும் போது திமுக கட்சி இந்த தொகுதியை எடுத்துக்கொள்ளாமல் சிபிஎம் கட்சிக்கு கொடுத்து உள்ளது. திமுக தனது வலுவான வேட்பாளரை களமிறக்கி இருந்தால் இங்கு வெற்றிபெற்று இருக்கும்.. மாறாக தினகரனுக்கு உதவும் வகையில் இங்கு சிபிஎம் கட்சியை இறங்கிவிட்டது, இது திட்டமிட்ட பிளான் என்று இணையத்தில் நேற்று விமர்சனங்கள் வைக்கப்பட்டன

ஆனால் திமுக முறையான திட்டத்துடன்தான் இங்கு சிபிஎம் கட்சியை இறக்கி உள்ளது. திமுகவின் இந்த முடிவு சரிதான் என்கிறார்கள். கோவில்பட்டி தொகுதி ஒரு கம்யூனிஸ்ட் ஆதரவு கொண்ட தொகுதியாகும். இங்கு சிபிஐ, சிபிஎம் இரண்டும் வலிமையான கட்சியாகும். கடந்த 10 சட்டசபை தேர்தலில் 7 முறை இங்கு சிபிஐதான் வென்று இருக்கிறது. அந்த அளவிற்கு இந்த தொகுதி கம்யூனிஸ்டுகளின் கோட்டையாகும்.

கோவில்பட்டி தொகுதியை சிபிஐ, சிபிஎம் இரண்டும் திமுகவிடம் கேட்டுள்ளது. பின்னர் சிபிஐ இறங்கி வந்த நிலையில் சிபிஎம்மிற்கு இந்த தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு திமுகவை விட இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் பலம் வாய்ந்த கட்சிகள் ஆகும். இதனால்தான் திமுக தைரியமாக இங்கு சிபிஎம்மை களமிறக்கி உள்ளது. இவர்கள் மூலம் அதிமுக, அமமுக இரண்டுக்கும் கடுமையான போட்டியை கொடுக்க முடியும்.

பாரம்பரிய வாக்குகள் இங்கு பாரம்பரியமான கம்யூனிஸ்ட் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். இங்கு 40% வாக்காளர்கள் கிட்டதட்ட கம்யூனிஸ்ட் வாக்காளர்கள். டிடிவி தினகரன் போட்டியிட்ட போது ஆர்கே நகரில் திமுக படுதோல்வி அடைந்தது. அதேபோல் இந்த முறை விட கூடாது. கடுமையான பைட் கொடுக்க வேண்டும் என்று திமுக முடிவில் இருக்கிறது . இதுதான் சிபிஎம்மை திமுக இங்கு களமிறக்க காரணம் என்கிறார்கள்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக