செவ்வாய், 2 மார்ச், 2021

மாண்புமிகு தளபதியார் அவர்களுக்கு அய்யா அதியமான் வாழ்த்து செய்தி.....

Thangaraj Gandhi : · திமுக தலைவர் M. K. Stalin மாண்புமிகு தளபதி அவர்களை அரியணையில் அமர்த்துவதே. அருந்ததியர் மக்கள் தெரிவிக்கின்ற பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதித்தமிழர் பேரவையின்
வாழ்த்துச் செய்தி...
பன்னெடுங்காலமாக மனித சமுதாயத்தை பாகுபடுத்திய ஆரியம் எனும் பார்ப்பனியத்திற்கு
கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக சவுக்கடி கொடுத்து வருவதென்றால் அது திராவிடம் மட்டும் தான்.
பார்ப்பனியம் எனும் நோயை விரட்ட திராவிடம் கையிலெடுத்த அரும்பெரும் மருந்து சமூக நீதி.
அந்த சமூக நீதி கோட்பாட்டை மக்களிடத்தில் சேர்த்த
நீதிக்கட்சி மற்றும் மாபெரும் ஆளுமைகளான தந்தை பெரியார்,
புரட்சியாளர் அம்பேத்கர்,  பேரறிஞர் அண்ணா,மற்றும்
முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர்கள் ஆரியத்தை எதிர்த்து சமத்துவத்தை உருவாக்க போராடியதால் அவர்கள் எப்போதும் என்றும் மக்களால் போற்றுதலுக்குரியவர்களாக இருக்கிறார்கள்
அவர்கள் முன்னெடுத்த அந்த சமூக நீதியை கடைக்கோடியில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒடுக்கப்பட்ட மக்களாக இருந்த அருந்ததியர் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த தலைவர் டாக்டர் கலைஞர் மாண்புமிகு தளபதியார் அவர்கள்
திமுக வழங்கிய உள் இட ஒதுக்கீட்டால் கடந்த 10 ஆண்டுகளில் அருந்ததியர்கள் மக்கள் வாழ்வியலில் மாபெரும் மாற்றமும் முன்னேற்றமும் ஏற்பட்டு இருக்கிறது
கல்வி வேலைவாய்ப்பு அனைத்திலும் இந்த சமூகம் முன்னேற்ற பாதையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது மக்கள் மத்தியில் சம வாய்ப்பை உருவாக்கித் தந்ததோடு சமூக மாற்றத்தையும் மறுமலர்ச்சியையும் ஏற்ப்படுத்தியிருக்கிறது.
அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மாற்றி அமைக்கும்
சமூக நீதியை நீர்த்துப்போகச் செய்யக்கூடிய ஆரியம் எனும் ஆபத்து தற்போது தமிழகத்தை மட்டும் அல்லாமல் நாட்டையே சூழ்ந்துள்ளது.
அந்த ஆரிய ஆபத்தை விரட்டியடிக்கும் சூறாவளியாய் இன்று சுழன்று கொண்டிருப்பதோடு,
சமூகநீதி சிந்தனையோடு தொடர் உத்வேகத்தோடு செயலாற்றி வருவது திமுகவின் தலைவர்
தமிழ் சமுதாயத்திற்க்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தலைவர் மாண்புமிகு தளபதியார் அவர்கள் தான்
தமிழகத்தின் முதல்வராக தளபதியார் இருந்தால் மட்டுமே தான் தமிழர்களின் உரிமை பாதுகாக்கப்படும் சமூகநீதி பாதுகாக்கப்படும் மாநில சுயாட்சி பாதுகாக்கப்படும்
தமிழர் உரிமை பாதுகாக்கும் அரணாக தளபதியார் இருப்பதால் தான் மாண்புமிகு தளபதியாரை தமிழக முதல்வராக அமர்த்தி விடக்கூடாது என்று பார்ப்பனிய சக்திகள் அனைத்தும் ஒன்று திரண்டு முழு பலத்தோடு எதிர்த்து வருகிறார்கள் சூழ்ச்சியை கடைபிடித்து வருகிறார்கள்
அவர்கள் சூழ்ச்சிகள் அனைத்தையும் முறியடித்து வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் வரலாறு காணாத தனிப் பெரும்பான்மையோடு திமுகவை வெற்றி பெற வைத்து மாண்புமிகு தளபதியார் அவர்களை தமிழக முதல்வர் என்ற அரியணையில் அமர்த்த தமிழர்களாகிய நாம் ஒன்றுகூடி போராடுவோம் அதற்கான பணிகளை முன்னெடுப்போம்
இப்போது நடப்பது வெறும் சட்டமன்ற தேர்தல் மட்டுமல்ல திராவிட ஆரிய போர் இதில் திராவிட சித்தாந்தம் சமூகநீதி சித்தாந்தம் சுயமரியாதை சித்தாந்தம் மாநில சுயாட்சி சித்தாந்தம் தமிழர் உரிமை சித்தாந்தம் என அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் திமுக வெல்ல வேண்டும்
திமுகவை ஆதரிப்போம்
திமுகவை வெற்றி பெறச் செய்வோம் தளபதியாரை முதல்வர் அரியணையில் அமர்த்துவோம்
திமுகவின் வெற்றியைத் தீர்மானிக்கும் அனைத்து சமூக மக்களின் வாக்குகளில் முதன்மையான வாக்கு வங்கியாக அருந்ததிய மக்களின் வாக்குகள் இருக்கும் என்று சொல்லி
நீண்ட ஆயுளுடன் இருந்து தமிழக மக்களுக்கு தலைமை தாங்கிட மாண்புமிகு தளபதியார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்..
அவரது பிறந்த நாளில் அண்ணா அறிவாலயம் சென்று நேரில் வாழ்த்து தெரிவித்தேன் மகிழ்ச்சி அடைகிறேன்..
இரா.அதியமான்.
நிறுவனர் தலைவர்.
ஆதித்தமிழர் பேரவை.
01-03-2021
https://t.co/8qDDyhGn2S https://t.co/kHwM5ACVOJ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக