ஞாயிறு, 7 மார்ச், 2021

தமிழகம் வருவோருக்கு இ- பாஸ் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம் வருவோருக்கு இ- பாஸ் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு
maalaimalar :சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று 562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் புதுச்சேரி, கர்நாடகா ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தால் இ- பாஸ் கட்டாயம் தேவை. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு இபாஸ் கட்டாயம் தேவை. வணிகரீதியான பயணமாக தமிழகத்தில் 3 நாட்கள் வரை தங்குவோருக்கு தனிமைப்படுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக