திங்கள், 8 மார்ச், 2021

திமுக கூட்டணிக்கு கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை ஆதரவு தெரிவித்துள்ளது!

  Hemavandhana - tamil.oneindia.com :சென்னை: சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை ஆதரவு தெரிவித்துள்ளது...
இந்த அதிரடி நடவடிக்கை அதிமுக தரப்பை அதிர்ச்சி அடைய செய்து வைத்து வருகிறது.
அன்று கூவத்தூர் சம்பவத்தில் அதிக அளவு பரபரப்பாக பேசப்பட்டவர் கருணாஸ்..
பல சர்ச்சைகளுக்கும் உள்ளானவர், சசிகலாவின் தீவிர ஆதரவாளராகவே கருதப்படுபவர்.
அதனால்தான் இந்த 4 வருட காலமும், எடப்பாடியாருக்கு முழு ஆதரவாக கருணாஸ் செயல்படாமலேயே இருந்தார்.
இதனிடையே, தேர்தல் பரபரப்புகள் தமிழகத்தில் தென்பட தொடங்கின.. கருணாஸ் தன் சார்பாக அதிமுக அரசுக்கு 2 கோரிக்கைகளை வைத்திருந்தார்..
ஒன்று, வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால், முக்குலத்தோர் சமூகத்துக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்



முன்னேற்றம் தங்களது சமூகமும், பிற சமூகங்களைப்போல பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும்... மதுரை ஏர்போர்ட்டிற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும்.. மேலும், வரும் தேர்தலில் தங்கள் கட்சிக்கு 2 சீட் தர வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை விடுத்தார். இந்த கோரிக்கைகளை அவர் முன்வைத்து பல நாட்கள் ஆகியும், அதிமுக எந்தவித பதிலையும் தராமலேயே இருந்தது.

தேமுதிக மாறாக, வன்னியர்களுக்கு மட்டும் இடஒதுக்கீட்டை அதிமுக அளித்திருந்தது கருணாஸ் தரப்புக்கு ஷாக்கையே தந்தது.. பாமக, தேமுதிகவுக்கே சீட் விஷயத்தில் கறார் காட்டி வந்த நிலையில், தான் எதிர்பார்க்கும் 2 சீட்டை அதிமுக தருமா என்ற சந்தேகமும் கருணாஸ் தரப்புக்கு எழுந்தபடியே இருந்தது. இந்த சமயத்தில்தான், சசிகலாவை ஒருசில அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து பேசினர்..

சசிகலா அப்போதே கருணாசும் சென்று சசிகலாவை சந்திப்பார் என்று தகவல்கள் வந்தனவே தவிர, கருணாஸ் செல்லவே இல்லை.. அதற்குள் சசிகலாவின் விலகல் அறிக்கையும் வெளியாகிவிட்டதால், கருணாசுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது.. அதிமுக பக்கமும் போகமுடியாமல், சசிகலாவிடம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.. இதன்பிறகுதான் திமுக தரப்பில் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருப்பதாக தகவல் வந்தது.

காய் நகர்த்தல் இறுதியில், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் சார்பில் இளைஞர் அணி செயலாளர் அஜய் வாண்டையார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் ஆதரவு கடிதத்தை வழங்கி விட்டார்.. திமுகவுடன் சேர்ந்து கருணாஸ் தேர்தலை சந்திக்க போகிறார்.. அதாவது எடப்பாடியாருக்கு எதிரான காய் நகர்த்தலை இனி பகிரங்கமாகவே நடத்துவார் என்று நம்பப்படுகிறது.. ஆனாலும், கருணாஸ் அதிமுக தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை திமுக நிறைவேற்றுமா என்பது தெரியவில்லை..

ஜெயலலிதா முக்குலத்தோர் புலிப்படை அமைப்புக்கென்று அரசியல் அடையாளத்தை கொடுத்தவர் ஜெயலலிதா.. அதற்கு உறுதுணையாக இருந்தவர் சசிகலா... 4 வருடம் கூட்டணியில் வைத்திருந்தவர் எடப்பாடியார்.. இவ்வளவையும் விட்டுவிட்டு, இன்று திமுக பக்கம் தாவியுள்ள கருணாஸுக்கு போட்டியிட திமுக வாய்ப்பு கொடுக்குமா என்பதும் மிகப்பெரிய கேள்விக்குறியே...!

எதிர்ப்பு வாக்குகள் ஏற்கனவே திமுகவில் பலர் முட்டி மோதி வரும் நிலையில், கருணாஸ் வருகை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் எதிர்பார்ப்புதான்... ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான பிரச்சாரத்துக்கு வேண்டுமானால் கருணாஸை திமுக பயன்படுத்தலாம், இது அதிமுக எதிர்ப்பு ஓட்டை அறுவடை செய்யும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. பார்ப்போம்..!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக