திங்கள், 8 மார்ச், 2021

வெறும் விளம்பர வெளிச்சங்கள் அல்ல... ஆரிய பார்ப்பன சக்திகளின் ஊடுருவல்கள்

நோட்டா' வாக்குகள் தமிழகத்தில் குறைய கமல், சீமான் காரணமா? - BBC News தமிழ்
செல்லபுரம் வள்ளியம்மை  : அதிமுக பாஜக காட்சிகளையும் விட விட சீமான் கட்சிக்கும் கமல் கட்சிக்கும் கிடைக்கும் விளம்பர வெளிச்சம்...   அளவு கடந்தது.  
தொலைக்காட்சி, இணையத்தளம் மற்றும் அச்சு ஊடக வெளிச்சங்கள் ஒரு பெரிய செய்தியை கூறுகிறது.
இதை பற்றி மக்களுக்கு போதிய விழிப்புணர்ச்சி இருக்கிறதா என்ற கேள்விகள்  எழுகின்றன.
ஒரு நாட்டை ஆக்கிரமிக்க ராணுவ கருவிகள் மற்றும் படைகளை அங்கு அனுப்புவது என்பது பழைய உலகத்து வாடிக்கை.
இன்றைய உலகில் அவை பலமிழந்துவிட்டன . அவற்றின் தேவையும் தற்போது இல்லை .மாறாக அவற்றை விட அதி சக்தி வாய்ந்த ஆயுதங்கள் இந்த ஊடகங்கள்தான்.
ஒவ்வொரு தனி மனிதரின்  மனதையும் தங்கள் ஆக்கிரமிப்பு பிரதேசங்களாக மாற்றும் வேலையை இவை செய்கின்றன.
ஆரிய ஆதிக்கத்தில் இன்றுவரை தப்பி பிழைத்த கொண்டிருக்கும் எல்லைக்காவலனாக தமிழ்நாடுதான் இருக்கிறது .
ஏனைய தென்னிந்திய மாநிலங்களும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களும்கூட தமிழ்நாட்டின் ஆரிய பார்ப்பன பனியா இந்தி எதிர்ப்பு  தளத்தில் மீதுதான் தங்களின் போர் பொறிமுறைகளை வகுத்து அந்த பாதையில் பயணிக்கின்றன.
வங்கத்து மம்தாவும் கேரளத்து பினராயும் தெலுங்கானா சந்திரசேகர ராவும்..இன்னும் பலரும்கூட இன்று எதிர்பார்த்து காத்திருப்பது தமிழ்நாட்டின் செய்தியைத்தான்.
இந்த உண்மையைத்தான் திராவிட முன்னேற்ற கழகத்தின் சித்தாந்த எதிரிகளுக்கு கிடைக்கும் அளவு கடந்த விளம்பரம் கூறுகிறது  
இவர்களுக்கு கிடைக்கும் வெளிச்சங்கள் வெறும் விளம்பரங்கள் அல்ல.
இவை எதிரியின் போர் முழக்கங்கள்   ஆரிய பார்ப்பன சக்திகளின் ஊடுருவல்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக