திங்கள், 1 மார்ச், 2021

தெலங்கானாவில் உரிமையாளரைக் குத்திக் கொன்ற கட்டுச் சேவல்

Indian man killed by his own bird during cockfight
BBC :சட்ட விரோதமான சேவல் சண்டைக்காக சேவலின் காலில் கட்டப்பட்டிருந்த கத்தியால், அதன் உரிமையாளர் உயிரிழந்துள்ளார். சேவல் உரிமையாளரின் கவட்டையில், சேவலின் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி ஆழமாக இறங்கிவிட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குள்ளேயே அதிக ரத்தப்போக்கால் அச்சேவல் உரிமையாளர் இறந்துவிட்டார். இந்த சம்பவம், கடந்த வாரத் தொடக்கத்தில், தெலங்கானாவில் உள்ள லொதுனூர் எனும் கிராமத்தில் நடந்து இருக்கிறது. இது தொடர்பாக காவல் துறை 15 பேரைத் தேடிக் கொண்டு இருக்கிறது. பண்ணை ஒன்றுக்கு அனுப்பப்படும் முன்னர், அந்தக் கட்டுச் சேவலைக் காவல் நிலையத்தில் வைத்திருந்தார்கள். சேவலைச் சண்டைக்குத் தயார் செய்து கொண்டிருந்த போது, சேவல் தப்பிக்கப் முயன்றிருக்கிறது. அப்போது அதன் உரிமையாளர் சேவலைப் பிடிக்க முயற்சித்த போது, அதன் காலில் கட்டப்பட்டிருந்த 7 சென்டிமீட்டர் நீளமுள்ள கத்தி, உரிமையாளரின் கவட்டைப் பகுதியில் ஆழமாகக் குத்திக் கிழித்துவிட்டது என காவல் துறை கூறியுள்ளது.

சேவலைச் சண்டைக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

சேவல் சண்டையில் ஈடுபட்டவர்கள் படுகொலை, சட்டத்துக்கு முரணாக பந்தயம் கட்டுவது, சேவல் சண்டையை நடத்துவது போன்ற குற்றசாட்டுகளின் கீழ் வழக்கை எதிர்கொள்வார்கள் என ஏ.எஃப்.பி செய்தி முகமை கூறியுள்ளது.

சேவலை ஓர் ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்பிப்போம் என உள்ளூர் காவல் துறை அதிகாரி பி. ஜீவன் கூறியதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

1960-ம் ஆண்டிலேயே இந்தியாவில் சேவல் சண்டை நடத்தக் கூடாது என தடை விதிக்கப்பட்டுவிட்டது. இருப்பினும் தெலங்கானா போன்ற மாநிலங்களின் கிராமப் புறங்களில், மகரசங்கராந்தி பண்டிகை காலத்தில் சேவல் சண்டை நடத்துவது வழக்கம்.

இப்படி சேவலின் உரிமையாளர், தன் சேவலாலேயே இறப்பது இது ஒன்றும் முதல்முறை இல்லை. கடந்த ஆண்டு கூட ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு சேவல் உரிமையாளர் தன் சேவலால் கழுத்தில் வெட்டுபட்டு இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக