திங்கள், 15 மார்ச், 2021

மம்தா பாதுகாப்பில் கவனக்குறைவுடன் செயல்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பணி இடைநீக்கம்; தேர்தல் ஆணையம் அதிரடி!

 Rayar A - tamil.oneindia.com : கொல்கத்தா: மம்தா பானர்ஜிக்கு பாதுகாப்பு வழங்கிய இசட்பிளஸ் பிரிவின் இயக்குநர் ஐபிஎஸ் அதிகாரி விவேக் சாஹேயை பணி இடைநீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
ரேயபாரா பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டபோது மம்தா பானர்ஜிக்கு இடது கால் மற்றும் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது.
இது திட்டமிட்ட தாக்குதல் என்று மம்தா கூறினார்.
ஆனால் காரின் கதவு இடித்ததால் அவர் காலில் அடிபட்டுள்ளது.என்று மாநில தேர்தல் ஆணையம் கூறியது.
மேற்கு வங்க மாநிலம் ரேயபாரா பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட மம்தா பானர்ஜியை சிலர் பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது.
இதில் மம்தாவின் இடது கால் மற்றும் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது.
இது திட்டமிட்ட சதி என்றும் சக்கர நாற்காலியில் வந்தாவது பிரசாரம் செய்வேன் என்றும் மருத்துமனையில் இருந்தபடி காலில் கட்டுப் போட்ட நிலையில் உருக்கமுடன் தெரிவித்தார் மம்தா. அதன்படி இன்று சக்கர நாற்காலியில் பிரசாரம் செய்தார் மம்தா


ஆனால் இந்த தாக்குதலை மறுத்துள்ள மேற்கு வங்க பாஜக, ''ஒரு சிறு விபத்தை பெரிய சம்பவம்போல் வெளிக்காட்டி, அனுதாபத்தை வெளிப்படுத்தி மம்தா ஓட்டுகளை வாங்க பார்க்கிறார் என்று சரமாரியாக குற்றம் சாட்டியது.
இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இதனை விசாரித்த மாநில தேர்தல் ஆணையம், ''மம்தாவை யாரும் தாக்கவில்லை. காரின் கதவு இடித்ததால் அவர் காலில் அடிபட்டுள்ளது.
பாதுகாப்பு குறைபாடுதான் என்று அறிக்கை அளித்தது.
இதனை தொடர்ந்து மம்தா பானர்ஜிக்கு பாதுகாப்பு வழங்கிய இசட்பிளஸ் பிரிவின் இயக்குநர் ஐபிஎஸ் அதிகாரி விவேக் சாஹேயை பணி இடைநீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக