திங்கள், 15 மார்ச், 2021

தேமுதிக 60 தொகுதிகளில் போட்டி பிரேமலதா விருத்தாசலத்தில் போட்டி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

 tamil.oneindia.com :சென்னை: அமமுகவுடன் கூட்டணி வைத்துள்ள தேமுதிக போட்டியிடும் 60 தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டன.
பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார். தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடவில்லை.
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றன.
அதிமுக, திமுக கூட்டணிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்து, அதிமுக, திமுக தேர்தல் அறிக்கையும் வெளியிட்டது.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக அதிமுக 20 தொகுதிகளை கூட ஒதுக்க முன் வராததால் கூட்டணியில் இருந்து வெளியேறியது.
அமமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் 60 தொகுதிகளின் லிஸ்ட் இதோ! பின்னர் டி.டி.வி தினகரனின் அமமுகவுடன் கூட்டணியில் இணைந்தது. முதலில் அமமுக-தேமுதிக இடையே பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறவில்லை.
இறுதியில் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு சுமுக முடிவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.இதனையடுத்து தேமுதிக போட்டியிடும் 60 தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டன.


அதன்பின்னர் சில மணி நேரங்களில் 60 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விருகம்பாக்கம் தொகுதியில் தே.மு.தி.க துணைப் செயலாளர் பார்த்தசாரதி போட்டியிடுகிறார். தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடவில்லை.
அதேபோல, எல்.கே.சுதிஷ், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ஆகியோரும் தேர்தலில் போட்டியிடவில்லை
தேமுதிக மொத்த வேட்பாளர் பட்டியல் விவரம் பின்வருமாறு:-
1. கும்மிடிப்பூண்டி - கே.எம். டில்லி
2. திருத்தணி - டி.கிருஷ்ணமூர்த்தி
3. ஆவடி - நா.மு.சங்கர்
4. வில்லிவாக்கம் - சுபமங்களம் டில்லிபாபு
5. திருவிக நகர் (தனி) - எம்.பி.சேகர்
6.எழும்பூர் - டி.பிரபு
7. விருகம்பாக்கம் - ப.பார்த்தசாரதி
8.சோழிங்கநல்லூர் - முருகன்
9.பல்லாவரம் - முருகேசன்
10.செய்யூர் (தனி) - சிவா
11.மதுராந்தகம் (தனி) - மூர்த்தி
12.கேவி குப்பம் (தனி) - தனசீலன்
13.ஊத்தங்கரை (தனி) - பாக்யராஜ்
14.வேப்பனஹள்ளி - எஸ்.எம்..முருகேசன்
15.பாலக்கோடு - விஜயசங்கர் 16.பென்னாகரம் - உதயகுமார்
17.செங்கம் (தனி) - அன்பு
18.கலசப்பாக்கம் - எம்.நேரு
19.ஆரணி - பாஸ்கரன்
20.மயிலம் - சுந்தரேசன்
21.திண்டிவனம் (தனி) - சந்திரலேகா
22.வானூர் (தனி) - கணபதி
23.திருக்கோவிலூர் - வெங்கடேசன்
24.கள்ளக்குறிச்சி (தனி) - விஜயகுமார்
25.ஏற்காடு - குமார்
26.மேட்டூர் - ரமேஷ் அரவிந்த்
27.சேலம் மேற்கு - அழகாபுரம் ஆர் மோகன்ராஜ்
28.நாமக்கல் - செல்வி
29.குமாரபாளையம் - சிவசுப்பிரமணியன்
30.பெருந்துறை - குழந்தைவேலு
31.பவானிசாகர் (தனி) - ரமேஷ்
32.கூடலூர் (தனி) - யோகேஸ்வரன்
33.அவிநாசி (தனி) - மீரா
34.திருப்பூர் வடக்கு - செல்வகுமார்
35.வால்பாறை (தனி) - முருகராஜ் 36.ஒட்டன்சத்திரம் - மாதவன்
37.நிலக்கோட்டை (தனி) - ராமசாமி
38.கரூர் - ரவி
39.கிருஷ்ணராயபுரம் (தனி) - கதிர்வேல்
40.மணப்பாறை - கிருஷ்ணகோபால்
41.திருவெறும்பூர் - செந்தில்குமார்
42.முசிறி - கே.எஸ்.குமார் 43.பெரம்பலூர் (தனி) - ராஜேந்திரன்
44.திட்டக்குடி (தனி) - உமாநாத்
45.விருத்தாசலம் - பிரேமலதா விஜயகாந்த்
46.பண்ருட்டி - சிவகொழுந்து
 47.கடலூர் - ஞானபண்டிதன்
48.கீழ்வேளூர் (தனி) - பிரபாகரன்
49.பேராவூரணி - முத்து சிவகுமார்
50.புதுக்கோட்டை - எம்.சுப்பிரமணியன்
51.சோழவந்தான் (தனி) - ஜெயலட்சுமி 52.மதுரை மேற்கு - பாலச்சந்தர்
53.அருப்புக்கோட்டை - ரமேஷ்
54.பரமக்குடி (தனி) - சந்திர பிரகாஷ்
55.தூத்துக்குடி - சந்திரன்
56.ஒட்டபிடாரம் (தனி) - ஆறுமுக நயினார்
57.ஆலங்குளம் - ராஜேந்திரநாதன் 58.ராதாபுரம் - ஜெயபால்
59.குளச்சல் - எம்.சிவக்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக